Numerology Horoscope: செப்டம்பர் 11ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?
Numerology Horoscope: எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது.
ராசி மண்டலத்தில் உள்ள ராசிகளை கொண்டு ஒரு நபரின் இயல்பு மற்றும் ஆளுமையை கணிக்க முடியும் என்பது போலவே நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது.
இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது. உங்களின் பிறந்த தேதியின் கூட்டுத் தொகையே நியுமராலஜி எண்ணாக கணக்கில் கொள்ளப்படுகின்றது. உதாரணமாக, 3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நியுமராலஜி எண்ணாக 03 (3 + 0 = 1, 1 + 2 = 3) இருக்கும்.
எண் 1
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஆனது மங்களகரமானதாக இருக்கப் போகிறது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். புதிய வேலையைத் தொடங்கி வெற்றி அடைவீர்கள். மன உளைச்சலில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது. நிதிநிலை சீராக ஆனந்தப்படுத்தும்.
எண் 2
இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இன்றைய நாள் சாதனைகள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. பணியிடத்தில் எந்த முக்கியமான வேலைகளை செய்து முடித்து பாராட்டுக்களை பெறுவீர்கள். பெற்றோர்கள் மூலம் பணவரவு கிடைக்கும். வாழ்கை துணை உங்களுக்கு ஆதரவாக நடந்துகொள்வார்கள்.
எண் 3
மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இயல்பான நாளாக இருக்கும். பணவரவு இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவுகள் இருக்கும். வீட்டை புதுப்பிப்பது குறித்த சிந்தனைகள் மேலோங்கும்.
எண் 4
நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கம் நிறந்து காணப்படும். சிலருக்கு உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தை விட்டு விலகி இருக்க நேரிடும். தேவையற்ற கோபத்தை தவிர்க்கவும்.
எண் 5
ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மங்களம் நிறைந்து இருக்கும். குடும்பத்துடன் ஆன்மீக தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். தந்தை மூலமாக சிலருக்கு பண வரவு உண்டாகும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
எண் 6
ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். கோபம் கொள்ளாமல் நிதானமாக செயல்படும் போது வெற்றிகள் சாத்தியமாகும். முதலீடு தொடர்பான விவகாரங்களில் முறையாக யோசித்து செயல்படுவது நல்லது. பணியிடத்தில் உங்கள் செயல்பாடுகள் மூலம் பாராட்டுகளை பெறுவீர்கள்.
எண் 7
ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பிஸியானதாக இருக்கும். பணி மற்றும் தொழில் சார்ந்த பணிகளில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். பணியிடத்தில் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். லாபம் அதிகரிக்கும். புத்தாண்டைகள் வாங்க செலவுகள் செய்வீர்கள்.
எண் 8
எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து இருக்கும், கல்விப் பணிகளில் ஈடுபடுபவர்கள் வெற்றி பெறுவீர்கள். சமூகத்தில் மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அதிகப்படியான செலவுகள் இருக்கலாம் என்பதால் கவனமாக செலவுகளை திட்டமிடுவது அவசியம்.
எண் 9
ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு தன்னம்பிக்கை குன்றலாம். சிலருக்கு பணிட மாற்றம் உண்டாகலாம். இந்த காலத்தில் பொறுமையாக செயல்படுவது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். கல்விப் பணிகளில் மகிழ்ச்சி தரும் பலன்கள் கிடைக்கும். அரசுக்கு ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்