Numerology Horoscope: டிசம்பர் 01ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology Horoscope: டிசம்பர் 01ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Numerology Horoscope: டிசம்பர் 01ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

Kathiravan V HT Tamil
Nov 30, 2024 01:52 PM IST

நியுமராலஜி எனப்படும் எண் கணிதம் மூலம் ஒருவரின் பிறந்த தேதி எண்ணை கொண்டு பலன்களை கணிக்க முடியும். எண் கணிதத்தை பொறுத்தவரை ஒவ்வொரு எண்ணும் ஏதாவது ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. இது ஒரு நபரின் வாழ்க்கையில் நன்மை மற்றும் தீமைகளை ஏற்படுத்தும் தன்மைகளை கொண்டு உள்ளது.

Numerology Horoscope: டிசம்பர் 01ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!
Numerology Horoscope: டிசம்பர் 01ஆம் தேதியான நாளை யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? நாளைய நியூமராலஜி பலன்கள் இதோ!

எண் 1 

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் மிகுந்த நாளாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும். உங்கள் செயல்பாடுகளுக்கு பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் உடல்நிலை சீராகி ஆனந்தம் தரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். 

எண் 2

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். வாழ்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில தடைகள் உண்டாகலாம். 

எண் 3

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மனம் மகிழ்ச்சியாக இருக்கும். கலை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். வியாபார முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உதவுவார்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். 

எண் 4 

நான்காம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மனதில் சில கவலைகள் வந்து செல்லலாம். தாயாரின் உடல்நிலையில் அக்கறை தேவை. குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். பணியிடங்களில் அதிக பணிச்சுமை இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

எண் 5

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு உள்ளத்தில் மகிழ்ச்சி கூடும் நாள். புதிய தொழில் தொடங்க திட்டமிடுவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பணம் கொடுத்து உதவுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கல்வி தொடர்பான பணிகளில் நன்மைகள் உண்டாகும். 

எண் 6

ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு பணியிடங்களில் பாராட்டுக்கள் கிடைக்கும். பேச்சில் இனிமை இருக்கும். இருப்பினும், உங்கள் மனம் சில விஷயங்களை நினைத்து கவலைப்படலாம். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும். பணியிடத்தில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

எண் 7

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டிய நாள். குடும்ப வாழ்க்கையில் சில சங்கடங்கள் உண்டாகும். செலவுகள் அதிகரிக்கும். அரசு அமைப்பில் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு தேடி வரும்.

எண் 8

எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இயல்பானதாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்டநாட்களாக தடைப்பட்டு இருந்த பணம் திரும்ப கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் விரிவடையும். பெற்றோரிடம் இருந்து பணம் கிடைக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

எண் 9

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைந்து இருக்கும். குடும்ப ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தந்தை வழியில் இருந்து ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்படலாம்.உங்கள் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். வியாபாரத்தில் விரிவாக்கம் கூடும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்