Numerology: ’நீங்க 3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவரா?’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்!-numerology benefits for number two born 3 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology: ’நீங்க 3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவரா?’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்!

Numerology: ’நீங்க 3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவரா?’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்!

Kathiravan V HT Tamil
Jan 29, 2024 07:35 AM IST

”Numerology: இவர்களுக்கு ஆசிரியர், ஜோதிடர்கள்,எழுத்தாளர்கள், போன்ற அறிவைத் தூண்டும் தொழில்கள் சிறப்பு தரும்”

3 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள்
3 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள்

நியூமரலாஜியில், ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் ஆற்றல் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த எண்கள் ஒருவரின் பிறந்த தேதி, பெயர் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களுடன் தொடர்புடையவையாக உள்ளது.

நியூமரலாஜி மூலம் ஒரு நபரின் ஆளுமை, திறன்கள், அவரது வாழ்கையின் சவாலான பகுதிகள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பற்றி அறிய முடியும். இது ஒரு நபரின் ஆளுமை மற்றும் திறன்களைப் பற்றிய தெளிவான புரிதலை அறிய உதவுகிறது. 

ஒரு நபரின் வாழ்க்கையில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் அடையாளம் காண நியுமராலஜி உதவுகிறது. ஒரு நபருக்கு தங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் வழிகாட்டுதல்களை இதன் மூலம் பெறலாம். ஒரு தனி நபர் தான் அடைய விரும்பும் இலக்கை அடையும் உத்வேகத்தை நியூமரலாஜி வழங்குகிறது.

3, 12, 21, 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள் இதோ:-

  • 3, 12, 21, 30 ஆகிய எண்களின் ஆதிபத்தியம் பெற்ற கிரகமாக குருபகவான் விளங்குகிறார். 
  • இந்த எண்ணில் பிறந்தவர்கள் எப்போதுமே அடுத்தவர்களுக்கு நல்லது மட்டுமே செய்யும் இயல்பு கொண்டவர்கள்.  
  • இவர்களின் திறமையையும், புத்திசாலித்தனத்தையும் மற்றவர்கள் பயன்படுத்திக்கொண்டு, இவர்களுக்குரிய மரியாதையை செய்யாமல் இருந்தாலும் அது பற்றி 3ஆம் எண் ஆதிபத்தியத்தில் பிறந்தவர்கள் கவலைப்பட மாட்டார்கள்.  
  • இந்த எண்களில் பிறந்தவர்கள் தங்களது உடை விஷயத்திலும், தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் விஷயத்திலும் ஆர்வமாக இருக்க மாட்டார்கள். மானத்தை மறைப்பதற்காக உடை அணிகிறோம் என்று மட்டும் நினைக்கும் தத்துவவாதிகளாக இருப்பர். 
  • அடுத்தவர்களிடம் உதவி கேட்டுச் செல்ல மாட்டார்கள். இவர்கள் அடுத்தவர்களின் வேலைக்காக மிகவும் அலையும் நிலை இருக்கும். 
  • இவர்களின் பேச்சில் மனச்சாட்சி, நேர்மை இருக்கும், சுதந்திரமாக வாழ ஆசைபப்டும் இவர்களுக்கு இயல்பிலேயே விட்டுக்கொடுக்கும் தன்மை இருக்கும்.  
  • குரு பகவானின் ஆதிக்கம் கொண்ட எண் என்பதால் இந்த எண்ணில் பிறந்தவர்கள் பிறர் மீது அன்பு செலுத்துவதிலும், பக்தியாக விளங்குவதிலும் சிறந்தவர்களாக இருப்பர். 
  • இவர்கள் விரும்பும் துறையில் துறையில் தனித் திறமையை பெற்று புகழ் பெறுவார்கள்.
  • 3ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு ஆசிரியர், ஜோதிடர்கள், எழுத்தாளர்கள் போன்ற அறிவைத் தூண்டும் தொழில்கள் சிறப்பு தருவதாக அமையும். 
  • நல்ல அரசு உத்தியோகங்கள் கிடைக்கும் யோகம் இவர்களுக்கு உண்டு.  
  • பேச்சாளர்கள், சிறந்த நுண்ணிய சாத்திர ஆராய்ச்சியார்கள், ஆலோசனையாளர்கள் போன்ற துறைகளிலும் இந்த எண்ணில் பிறந்தவர்கள் பிரகாசிப்பார்கள்.