Numerology: ’நீங்க 2, 11, 20, 29 ஆம் தேதிகளில் பிறந்தவரா?’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்!
“2,11,20,29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்கள்”
நியூமரலாஜி என்பது ‘எண்களின் மொழி’ என்று அழைக்கப்படுகிறது. இது எண்கள் மற்றும் அவற்றின் தொடர்புகளின் அடிப்படையில் ஒரு நபரின் வாழ்க்கை, குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலத்தை பலன்களை அறிய முடியும்.
நியூமரலாஜியில், ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் ஆற்றல் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த எண்கள் ஒருவரின் பிறந்த தேதி, பெயர் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களுடன் தொடர்புடையவையாக உள்ளது.
நியூமரலாஜி மூலம் ஒரு நபரின் ஆளுமை, திறன்கள், அவரது வாழ்கையின் சவாலான பகுதிகள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பற்றி அறிய முடியும். இது ஒரு நபரின் ஆளுமை மற்றும் திறன்களைப் பற்றிய தெளிவான புரிதலை அறிய உதவுகிறது. ஒரு நபரின் வாழ்க்கையில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் அடையாளம் காண நியுமராலஜி உதவுகிறது. ஒரு நபருக்கு தங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் வழிகாட்டுதல்களை இதன் மூலம் பெறலாம். ஒரு தனி நபர் தான் அடைய விரும்பும் இலக்கை அடையும் உத்வேகத்தை நியூமரலாஜி வழங்குகிறது.
2, 11, 20, 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள் இதோ:-
இரண்டாம் என் என்பதும் நம் வாழ்வில் ஓர் முக்கியத்துவம் கொண்ட எண்ணாக விளங்குகிறது. இந்த எண்ணின் ஆதிபத்தியம் பெற்ற கிரகம் சந்திரன் ஆகும்.
2, 11, 20, 29 ஆகிய இரண்டாம் எண்ணின் ஆதிபத்தியம் கொண்ட தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.
சந்திரனை ஜோதிடத்தில் நீர் கிரகம் என அழைப்பார்கள். இந்த எண்ணில் பிறந்தவர்கள் எளிதில் கலங்கும் மனம் உடையவர்களாக இருந்தாலும், பின் தெளிவாகி இயல்புநிலைக்கு வந்துவிடுவார்கள்.
இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருக்கும். எதையும் முன் கூட்டியே அறியும் நுண்ணறிவும் கற்பனை சக்தியும் அதிகம் உண்டு என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
சாந்தம், சகிப்புத் தன்மை, மேலோரிடத்தில் மரியாதை, கடவுள் பக்தி அதிகம் கொண்டவர்களாக இந்த எண்ணில் பிறந்தவர்கள் இருப்பார்கள்.
இந்த 2ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு கடல் தாண்டி சென்று சம்பாதிக்கும் யோகம் இருக்கும் என நியூமராலஜி கூறுகின்றது.
இவர்கள் இஷ்ட தெய்வமாக பராசக்தியையும், ராசியான நிறமாக வெள்ளை நிறத்தையும் கொண்டிருந்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
டாபிக்ஸ்