Tamil News  /  Astrology  /  Numerology Benefits For Number One Born 1

Numerology: ’நீங்க 1 ஆம் தேதி பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்! நியூமராலஜி ரகசியங்கள்!

Kathiravan V HT Tamil
Jan 27, 2024 11:10 AM IST

”Numerology Benefits: 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் யோகத்தை தரக்குடியவராக இருப்பார்”

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள்
ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

நியூமரலாஜியில், ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் ஆற்றல் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த எண்கள் ஒருவரின் பிறந்த தேதி, பெயர் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களுடன் தொடர்புடையவையாக உள்ளது. 

நியூமரலாஜி மூலம் ஒரு நபரின் ஆளுமை, திறன்கள், அவரது வாழ்கையின் சவாலான பகுதிகள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பற்றி அறிய முடியும்.   இது ஒரு நபரின் ஆளுமை மற்றும் திறன்களைப் பற்றிய தெளிவான புரிதலை அறிய உதவுகிறது. ஒரு நபரின் வாழ்க்கையில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் அடையாளம் காண நியுமராலஜி உதவுகிறது. ஒரு நபருக்கு தங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் வழிகாட்டுதல்களை இதன் மூலம் பெறலாம். ஒரு தனி நபர் தான் அடைய விரும்பும் இலக்கை அடையும் உத்வேகத்தை நியூமரலாஜி வழங்குகிறது. 

ஒன்றாம் தேதியில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள் இதோ:-

  • ஒன்றாம் எண்ணின் ஆதிபத்தியம் பெற்ற கிரகம் சூரியன் ஆகும். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ காரணமாக சூரியபகாவன் உள்ளார். 
  • 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சூரியன் யோகத்தை தரக்கூடிய கிரகமாக இருப்பார். 
  • இந்த தேதியில் பிறந்து, ஜாதகத்தில் சூரியன் வலுவாக இருந்து அந்த திசா மட்டும் வந்தால் உயர்ந்த இடத்தில் வேலை தலைமை பொறுப்பு கிட்டும். 
  • அரசாங்க பதவி, சமுதாயத்தில் மற்றவர் மதிக்கும் இடத்தில் இவர்கள் நம்பர் 1-ஆக இருப்பார்கள். 
  • சூரியனின் குணமே தலைமை பண்புதான். இந்த தேதியில் பெண்ணாக பிறந்தாலும் அவரும் நிர்வகிக்கும் திறமையை பெற்றியிருப்பார். நல்ல ஆளுமைதிறன், பேச்சு திறன் இவர்களுக்கு இருக்கும்.
  • ஒன்றாம் எண் ஆதிபத்தியம் பெற்றவர்கள் ராசியான நிறம் சிகப்பு ஆகும். இவர்களின் இஷ்ட தெய்வம் சிவன் ஆகும். 
  • இவர்கள் மாணிக்கத்தை ராசிக்கல்லாக அணியை அதிஷ்டம் உண்டாகும். இவர்களது ராசியான கிழமை ஞாயிறு ஆகும். 
  • மேற்கண்ட பலன்கள் பொதுவானதாகும். ஜாதகத்தின் சூரியன் மற்றும் மற்ற கிரகங்களின் நிலையை வைத்தும் மேற்கண்ட தேதிகளில் பிறந்தவர்கள் வளமான வாழ்வை அமைத்துகொள்ளலாம்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்