Numerology: ’நீங்க 9, 18, 27 ஆம் தேதிகளில் பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்! நியூமராலஜி ரகசியங்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology: ’நீங்க 9, 18, 27 ஆம் தேதிகளில் பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்! நியூமராலஜி ரகசியங்கள்!

Numerology: ’நீங்க 9, 18, 27 ஆம் தேதிகளில் பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்! நியூமராலஜி ரகசியங்கள்!

Kathiravan V HT Tamil
Feb 05, 2024 08:30 AM IST

”Numerology Benefits: 9,18,27 ஆம் எண்களில் பிறந்தவர்களுக்கு சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் உண்டு. தெருச் சண்டை முதல் யுத்தக்களம் வரை இவர்களை பார்க்கலாம்”

9 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள்
9 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள்

நியூமரலாஜியில், ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் ஆற்றல் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த எண்கள் ஒருவரின் பிறந்த தேதி, பெயர் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களுடன் தொடர்புடையவையாக உள்ளது.

நியூமரலாஜி மூலம் ஒரு நபரின் ஆளுமை, திறன்கள், அவரது வாழ்கையின் சவாலான பகுதிகள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பற்றி அறிய முடியும். இது ஒரு நபரின் ஆளுமை மற்றும் திறன்களைப் பற்றிய தெளிவான புரிதலை அறிய உதவுகிறது.

ஒரு நபரின் வாழ்க்கையில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் அடையாளம் காண நியுமராலஜி உதவுகிறது. ஒரு நபருக்கு தங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் வழிகாட்டுதல்களை இதன் மூலம் பெறலாம். ஒரு தனி நபர் தான் அடைய விரும்பும் இலக்கை அடையும் உத்வேகத்தை நியூமரலாஜி வழங்குகிறது.

9, 18, 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள் இதோ:-

  • தைரியத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் உரிய எண்ணாக 9 ஆம் எண் விளங்குகிறது. 
  • இந்த எண்ணின் ஆதிபத்தியம் பெற்ற கிரகம் செவ்வாய் பகவான் ஆவர். 
  • இந்த எண்ணின் அதிபதியாக தமிழ் கடவுள் முருகப் பெருமான் விளங்குகிறார். 
  • 9, 18, 27 ஆம் எண்களில் பிறந்தவர்களுக்கு சவால்களைத் துணிந்து எதிர்கொள்ளும் தன்மையும் உண்டு. தெருச் சண்டை முதல் யுத்தக்களம் வரை இவர்களை பார்க்கலாம் என்கின்றனர் நியுமராலஜி ஜோதிடர்கள்.
  • அதிகாரமுள்ள காவல்துறை, இராணுவம் ஆகிய தொழில்களில் 9ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிக ஈர்ப்பு இருக்கும். 
  • அலைபாயும் மனம் கொண்ட இவர்கள் எந்த வேலையையும் உடனடியாக செய்து முடிக்கும் தன்மை கொண்டவர்களாக விளங்குவர்.
  • அவசரமும் சுறுசுறுப்பும் கொண்ட இவர்கள் முன் கோபக்காரர்களாய் இருப்பர்.
  • சிறு வயதுகளில் மிகவும் சிரமப்பட்டாலும் மன உறுதி விடா முயற்சியினால் எப்படியும் பிற்காலத்தில் முன்னேறி விடுவார்கள்.
  • இவர்களில் பெரும்பாலோர் பொறியாளர்களாகவும், அறுவை சிகிச்சை நிபுணர்களாகவும் இருப்பார்கள்.
  • கட்டிடம் கட்டுதல் இயந்திரங்கள், வியாபாரம், இரும்புச் சாமான்கள் உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் இவர்களுக்கு ஆகியவை நல்ல அதிர்ஷ்டம் தரும்.
  • சிறந்த அமைச்சர்களாகவும், இராஜ தந்திரிகளாகவும் இருப்பார்கள். வானியல்துறையும், இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
  • போராட்ட குணத்துக்கு உரிய எண் என்பதால்தான் விளையாட்டு வீரர்கள் பெரும்பாலனவர்கள் 9-ம் நம்பர் வருவது போல் தேர்ந்தெடுத்துகொள்வார்கள்.
  • 9ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான அதிர்ஷ்ட கிழமை செவ்வாய்,  அதிர்ஷ்ட கல் பவழம் ஆகும். 

Whats_app_banner

டாபிக்ஸ்