Numerology: ’நீங்க 4,13,22,31 தேதிகளில் பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்!
”Numerology Benefits: 4,13,22,31 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் துப்பறியும் துறையில் கோலோச்சுபவர்களாக இருப்பார்கள்”
நியூமரலாஜி என்பது ‘எண்களின் மொழி’ என்று அழைக்கப்படுகிறது. இது எண்கள் மற்றும் அவற்றின் தொடர்புகளின் அடிப்படையில் ஒரு நபரின் வாழ்க்கை, குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலத்தை பலன்களை அறிய முடியும்.
நியூமரலாஜியில், ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் ஆற்றல் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த எண்கள் ஒருவரின் பிறந்த தேதி, பெயர் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களுடன் தொடர்புடையவையாக உள்ளது.
நியூமரலாஜி மூலம் ஒரு நபரின் ஆளுமை, திறன்கள், அவரது வாழ்கையின் சவாலான பகுதிகள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பற்றி அறிய முடியும். இது ஒரு நபரின் ஆளுமை மற்றும் திறன்களைப் பற்றிய தெளிவான புரிதலை அறிய உதவுகிறது.
ஒரு நபரின் வாழ்க்கையில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் அடையாளம் காண நியுமராலஜி உதவுகிறது. ஒரு நபருக்கு தங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் வழிகாட்டுதல்களை இதன் மூலம் பெறலாம். ஒரு தனி நபர் தான் அடைய விரும்பும் இலக்கை அடையும் உத்வேகத்தை நியூமரலாஜி வழங்குகிறது.
4,13,22,31 தேதிகளில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள் இதோ:-
- 4-ம் எண்ணின் ஆதிபத்தியம் பெற்ற கிரகம் ராகு ஆகும்.
- இந்த கிரகத்தின் குணாதிசயத்தை யாரலும் துல்லியாமாக கணிக்கமுடியாது என்பதால் இந்த எண்ணில் பிறந்தவர்களின் மனநிலையையும் கணிப்பது கடினம்.
- 4, 13, 22, 31 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் துப்பறியும் துறையில் கோலோச்சுபவர்களாக இருப்பார்கள்.
- ஆராய்ச்சியாளர்கள், புலனாய்வு, செய்தி உள்ளிட்ட துறைகளில் இவர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.
- எப்போதும் நான்கு பேருடன் கலகலப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பும் இவர்களுக்கு தனிமை பிடிக்காது.
- பணம் சம்பாதிக்கும்போது இருக்கும் பொறுமையை, பணம் செலவழிப்பதில் காட்டமாட்டார்கள்.
- இளமைப் பருவத்தில் விளையாட்டு, உடற்பயிற்சி ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு கொள்வார்கள்.
- எதிலும் எதிர்ப்பு உள்ள விவகாரங்களையே எடுத்து வாதாடும் குணம் இவர்களுக்கு உண்டு.
- நண்பர்களுக்காகச் செலவு செய்யத் தயங்காத இவர்கள் உண்மையான அன்பிற்கு ஏங்குவார்கள்.
- சமுதாய முன்னேற்றம், நாட்டு நடப்புக்கள் குறித்து பொது இடங்களில் காரசாரமாக விவாதிக்கும் திறன் இவர்களுக்கு உண்டு.
- இவர்களது வருமானம் உயர உயரச் செலவும் அதிகமாகிக் கொண்டே வரும். எனவே, செலவு செய்வதில் நிதானம் தேவை. இவர்கள் மக்களை நிர்வகிக்கும் வித்தையை அறிந்தவர்கள்.
- இதனால் போலீஸ், மேலாளர் போன்ற மேலாண்மை திறன்சார்ந்த துறைகளில் இவர்களால் சிறந்து விளங்க முடியும்.
டாபிக்ஸ்