Numerology: ’நீங்க 5, 14, 23 பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்! நியூமராலஜி ரகசியங்கள்!
“5, 14, 23 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்தி அதாவது அறிவு மிகவும் அற்புதமானது”
நியூமரலாஜி என்பது ‘எண்களின் மொழி’ என்று அழைக்கப்படுகிறது. இது எண்கள் மற்றும் அவற்றின் தொடர்புகளின் அடிப்படையில் ஒரு நபரின் வாழ்க்கை, குணாதிசயங்கள் மற்றும் எதிர்காலத்தை பலன்களை அறிய முடியும்.
நியூமரலாஜியில், ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் ஆற்றல் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த எண்கள் ஒருவரின் பிறந்த தேதி, பெயர் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களுடன் தொடர்புடையவையாக உள்ளது.
நியூமரலாஜி மூலம் ஒரு நபரின் ஆளுமை, திறன்கள், அவரது வாழ்கையின் சவாலான பகுதிகள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பற்றி அறிய முடியும். இது ஒரு நபரின் ஆளுமை மற்றும் திறன்களைப் பற்றிய தெளிவான புரிதலை அறிய உதவுகிறது.
ஒரு நபரின் வாழ்க்கையில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் அடையாளம் காண நியுமராலஜி உதவுகிறது. ஒரு நபருக்கு தங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் வழிகாட்டுதல்களை இதன் மூலம் பெறலாம். ஒரு தனி நபர் தான் அடைய விரும்பும் இலக்கை அடையும் உத்வேகத்தை நியூமரலாஜி வழங்குகிறது.
5, 14, 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள் இதோ:-
- 5ஆம் எண்ணுக்கு உரிய கிரகமாக புதன் கிரகம் உள்ளது.
- உலகை காத்து ரட்சிக்கும் மகா விஷ்ணு புதனுக்கு உரிய தெய்வம் ஆகும்.
- 5ஆம் எண்ணை அனைவரும் விரும்புவார்கள். அனைத்து எண்களுக்கும் இந்த ஐந்தாம் எண் பொதுவாக உள்ளது.
- மிக நன்மையும், அதிர்ஷ்டத்தையும் 5ஆம் எண் தர வல்லது என்கிறார் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
- புதனின் ஆதிக்கம் வலு பெற்று இருப்பவர்களுக்கு பெருத்த யோகங்களைக் கொடுக்கும். புதனின் எண் இல்லாதவர்களுக்கும்கூட இந்த ஆதிக்கமானது, நல்ல பலன்களைத் தரக்கூடியது.
- 5, 14, 23 இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அறிவு சார் சிந்தனைகள் அதிகம் இருக்கும்.
- ஐந்தாம் எண்ணின் தன்மை யாருக்கும் எந்த கெடுதலையும் செய்யாது. இந்த சக்தி மற்ற எந்த எண்களுக்கும் கிடையாது.
- ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள், சிந்தனைகள் கொண்டவராக ஐந்தாம் எண்ணில் பிறந்தவகள் இருப்பார்கள்.
- இவர்களது பேச்சில் கேலியும் (அடுத்தவர் புண்படுத்தாமல்) கிண்டலும், சிரிப்பும் கலந்திருக்கும்.
- எத்தகைய நபர்களைச் சந்தித்தாலும், தங்களது தனித்தன்மையை அவர்களுக்குச் சீக்கிரம் உணர்த்திவிடுவார்கள்.
- பல வருடகாலம் நண்பர்களாக நீடித்துத் தொடர்பு கொள்ளும் தன்மையும், கவர்ச்சியும், நட்புப் பலமும் இந்த 5 எண்ணில் பிறந்தவர்களுக்கு உண்டு.
- இவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட எந்தத் துறையிலும், தங்களது திறமையின் மூலம் விரைந்து உச்சியை அடைந்துவிட வேண்டும் என்று துடிப்பார்கள்.
- எழுத்தாளர், பத்திரிக்கையாளர், அரசியல் துறை, ஆடிட்டர், தூதுவர்கள், வானியல் ஆய்வு, மக்கள் தொடர்பு, செய்தித் துறை போன்ற தொழில்களில் இவர்கள் சிறந்து விளங்குவர்.
டாபிக்ஸ்