Numerology: ’நீங்க 8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்! நியூமராலஜி ரகசியங்கள்!-numerology benefits for number eighth born 8 - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Numerology: ’நீங்க 8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்! நியூமராலஜி ரகசியங்கள்!

Numerology: ’நீங்க 8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவரா? ’ உங்க வாழ்கை இப்படிதான் இருக்கும்! நியூமராலஜி ரகசியங்கள்!

Kathiravan V HT Tamil
Feb 04, 2024 02:29 PM IST

”Numerology Benefits: அறிவியல் மேதைகள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பிரபல இயக்குனர்கள் போன்றவர்கள் 8ஆம் எண் ஆதிக்கத்திலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள்”

8 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான் நியூமராலஜி பலன்கள்
8 ஆம் எண்ணில் பிறந்தவர்களுக்கான் நியூமராலஜி பலன்கள்

நியூமரலாஜியில், ஒவ்வொரு எண்ணுக்கும் ஒரு தனித்துவமான அர்த்தம் மற்றும் ஆற்றல் இருப்பதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த எண்கள் ஒருவரின் பிறந்த தேதி, பெயர் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களுடன் தொடர்புடையவையாக உள்ளது.

நியூமரலாஜி மூலம் ஒரு நபரின் ஆளுமை, திறன்கள், அவரது வாழ்கையின் சவாலான பகுதிகள் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றை பற்றி அறிய முடியும். இது ஒரு நபரின் ஆளுமை மற்றும் திறன்களைப் பற்றிய தெளிவான புரிதலை அறிய உதவுகிறது.

ஒரு நபரின் வாழ்க்கையில் உள்ள சவால்களையும் வாய்ப்புகளையும் அடையாளம் காண நியுமராலஜி உதவுகிறது. ஒரு நபருக்கு தங்கள் வாழ்க்கையில் சிறந்த முடிவுகளை எடுக்க உதவும் வழிகாட்டுதல்களை இதன் மூலம் பெறலாம். ஒரு தனி நபர் தான் அடைய விரும்பும் இலக்கை அடையும் உத்வேகத்தை நியூமரலாஜி வழங்குகிறது.

8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கான நியூமராலஜி பலன்கள் இதோ:-

8ஆம் எண்ணுக்கு உரிய கிரகம் சனி பகவான். 8, 17, 26 போன்ற எட்டாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் சனி யோகராகவே இருப்பார். 

பொதுவாகவே சனியின் மீது யாருக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. மற்றவரை திட்டுவதற்கு இவரை இழுக்காமல் இருக்கமாட்டார்கள். அதனால்தான் 8ஆம் எண் மேல் பெரும்பாலனவர்களுக்கு வெறுப்பு உள்ளது. 

சனி பகவானின் உருவமும், செயலும் சரியாக இல்லாவிட்டாலும் அவரை போல் ராஜ யோகத்தை கொடுப்பவர் யாரும் இல்லை என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

இவர்கள் பெரும்பாலும் மன உறுதி படைத்தவர்களகவே இருப்பார்கள். மேலும் எந்தவித காரியங்களையும் பொறுமையுடன் செய்வார்கள். 

அறிவியல் மேதைகள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், பிரபல இயக்குனர்கள் போன்றவர்கள் 8ஆம் எண் ஆதிக்கத்திலேயே பிறந்தவர்களாக இருப்பார்கள். 

மகர ராசி, மகர லக்கினம், கும்ப ராசி, கும்ப லக்கினம், ரிசப லக்கினம், துலாம் லக்கின காரர்களும், பூசம், அனுசம், உத்திராட்டாதி நட்சத்திர காரர்களும் சனி வலுவாக இருந்தால் 8ஆம் எண்ணை ராசியாக வைத்துகொண்டால் வாழ்வு வளம் பெரும்.

டாபிக்ஸ்