Weekly Numerology: ஜனவரி (19-26) மாதத்தின் 3வது வாரம்! யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்! நியூமராலஜி பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Weekly Numerology: ஜனவரி (19-26) மாதத்தின் 3வது வாரம்! யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்! நியூமராலஜி பலன்கள்!

Weekly Numerology: ஜனவரி (19-26) மாதத்தின் 3வது வாரம்! யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்! நியூமராலஜி பலன்கள்!

Kathiravan V HT Tamil
Jan 19, 2025 07:47 PM IST

ஜோதிடத்தைப் போலவே, எண் கணிதமும் ஜாதகரின் எதிர்காலம், இயல்பு மற்றும் ஆளுமையை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு பெயருக்கும் ஒரு ராசி இருப்பது போல, எண் கணிதத்தில் ஒவ்வொரு எண்ணுக்கு ஏற்ப எண்கள் உள்ளன.

Weekly Numerology: இந்த வாரம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? அக்டோபர் 3வது வாரத்திற்கான நியூமராலஜி பலன்கள்!
Weekly Numerology: இந்த வாரம் யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்? அக்டோபர் 3வது வாரத்திற்கான நியூமராலஜி பலன்கள்!

எண் 1

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு எச்சரிக்கை உடன் செயல்பட வேண்டிய வாரம் இது. இரவு நேர வாகன பயணங்களில் எச்சரிக்கை தேவை. பிரிந்த காதல் உறவுகள் மீண்டும் துளிர்க்கும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். கலை மற்றும் படைப்பு துறைகளில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். 

 

எண் 2

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு கலப்பு பலன்கள் நிறைந்த நாள் இது. தூசி நிறைந்த இடங்களில் இருந்து விலகி இருங்கள். காதல் வாழ்க்கையில் சில பிரச்சினைகள் இருக்கலாம். தொழிலில் வளர்ச்சி வாய்ப்புகள் உண்டாகும். நிதிநிலைமை மேம்பாடு அடையும். 

எண் 3

மூன்றாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் நிறைந்த வாரம் இது. புதிய வேலையில் சேர்ந்தவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் உங்களை வாழ்த்துவார்கள். ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள். 

எண் 4

நான்காம் எண்ணில் பிறந்தவர்கள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டிய வாரம் இது. முறையான உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல்நலம் மேம்பாடு அடையும். வாழ்கை துணை உடன் வாக்குவாதம் வேண்டாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கூடும். 

எண் 5

ஐந்தாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நன்மைகள் நிறைந்த வாரம் இது. வயதானவர்களுக்கு மூட்டு வலி வரலாம். புதிய முதலீடுகள் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. தொழில் வாழ்கையில் முன்னேற்ற வாய்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் உள்ள அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டிய காலம் இது. 

எண் 6

ஆறாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு நிதி ரீதியாக நன்மைகள் உண்டாகும் வாரம் இது. வாரத்தின் தொடக்கத்தில் சில தடைகள் இருந்தாலும், இறுதியில் சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கைக்கூடும். மாணவர்கள் தேர்வுகளுக்கு சிறப்பாக தயாராவீர்கள். 

எண் 7

ஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் கவனம் உடன் செயல்பட வேண்டிய நாள். பணியிடங்களில் அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள். உடல்நிலையிலும், உணவு விவகாரத்திலும் கவனம் தேவை. அலுவலகத்தில் உயரதிகாரிகள் பாராட்டுக்கள் கிடைக்கும். பயண நேரங்களில் கவனமாக இருக்கவும். 

எண் 8
எட்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாரம் இது. குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் உண்டாகும். உடல் நலக்குறைவு உள்ளவர்கள் கவனமாக இருங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சியும் முன்னேற்றமும் உண்டு.

எண் 9

ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்கள் நிதி விவகாரங்களில் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். யாருக்கும் கடன்களை கொடுக்க வேண்டாம். அலுவலக அரசியலால் சில சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். வியாபாரத்தில் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்