ஓகோனு இருக்கப்போகும் நவம்பர்! மேஷ ராசிக் காரர்களுக்கு அடிக்கப் போகும் யோகம்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ஓகோனு இருக்கப்போகும் நவம்பர்! மேஷ ராசிக் காரர்களுக்கு அடிக்கப் போகும் யோகம்!

ஓகோனு இருக்கப்போகும் நவம்பர்! மேஷ ராசிக் காரர்களுக்கு அடிக்கப் போகும் யோகம்!

Suguna Devi P HT Tamil
Published Oct 25, 2024 04:55 PM IST

ஆண்டு கிரகங்கள் எதிலும் பெரிதான மாற்றம் இல்லாத காரணத்தால் மேஷம் ராசிக்கு 2024 ஆம் ஆண்டிற்கான நவம்பர் மாதம் மிகவும் யோகம் நிறைந்த மாதமாக இருக்கப்போகிறது.

ஓகோனு இருக்கப்போகும் நவம்பர்! மேஷ ராசிக் காரர்களுக்கு அடிக்கப் போகும் யோகம்!
ஓகோனு இருக்கப்போகும் நவம்பர்! மேஷ ராசிக் காரர்களுக்கு அடிக்கப் போகும் யோகம்!

இது போன்ற போட்டோக்கள்

இருப்பினும் மாத கிரகங்களான செவ்வாய் சுக்கிரன் மற்றும் புதன் சூரியன் ஆகிய கிரகங்கள் இடப்பெயர்ச்சி ஆகின்றன. நவம்பர் மாதம் முழுவதும் புதன் விருச்சிக ராசியிலேயே நீடித்து இருக்கப் போகிறார்.  சனி கும்பத்தில் பத்தாவது இடத்தில் உள்ளதால் மேஷ ராசியினர் பல யோகங்களை  கும்பத்தில் பத்தாவது இடத்தில் உள்ளதால் மேஷ ராசியினர் பல யோகங்களை பெறுகின்றனர்.

செவ்வாயின் ஆதிக்கம் 

செவ்வாயின் ஆதிக்கம் உள்ள மேஷ ராசிக்காரர்கள் ஆகியவர்களுக்கு ஆட்சி அதிபதி செவ்வாய் நன்காம் இடத்தில் நீச்சமாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லப்படுகிறது.  மேஷ ராசிக்காரர்கள் நீச்சமா போயிருந்தாலும் அது தவறில்லை எனதெரிந்து கொள்ள வேண்டும்.  ஆனால் மன உளைச்சல்கள் பிரச்சனைகள், பாவத்துவத்தின் சில செயல்பாடுகள் வராமல் ஓரளவுக்கு பிரச்சனை இல்லாமல் வாழக்கூடிய அமைப்புகள்  உருவாகும். அதே சமயத்தில் இப்போ புதன் அதாவது மூனுக்கும் ஆறுக்கும் இடையே புதன் வந்து விருச்சிக ராசியிலே நீடித்திருக்கிறதுனால ஆறாம் வீட்டு அதிபதியாக புதன் 8க்கு வருவது  இந்த சில விஷயங்கள் கவனமா இருக்க வேண்டும்.

பயணத்தின் போது கொஞ்சம் உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமா இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. முக்கியாக அடிவயிறு கோளாறுகள், அஜீரண கோளாறுகள் போன்ற சில உடல் உபாதைகள் பெறக்கூடிய அமைப்புகள் இருக்கிறது. எனவே உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

யோகம் அதிகரிக்கும் 

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு நவம்பர் மாதத்தில் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எனவே இந்த மாதாதில் தைரியமாக தொழில் தொடங்கலாம். அதிகமாக பணம் சேரக்கூடிய சாதகமான சூழ்நிலை ஏற்படும். புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டும், முன்னேற்றமும் அடைவீர்கள். உங்களின் இலக்குகளை எளிதாக அடைய முடியும். நீண்ட கால பிரச்சனைகள் தீரும். உங்களின் உடல் ஆரோக்கியத்தை முன்னேற்றம் ஏற்படும். பழைய நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.