Dhanusu Rasi Luck: மத்தளமாய் அடிவாங்கிய தனுசு ராசி;இனியாவது இழந்தது கை வருமா? - எப்படி இருக்கும் எதிர்காலம்!
முதற்கட்டமாக உங்களுக்கு இருந்த பணத் தொல்லை, அவமானங்கள் என எல்லாம் நொறுங்கி தவிடு பொடி ஆகி விடப் போகின்றன. உங்களுக்கு மன நிம்மதி வந்து சேரும்.
தனுஷூ ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்பது குறித்து பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் ஆஸ்ட்ரோவெல் ஜோதிடம் யூடியூப் சேனலில் பேசினார். அவர் பேசும் போது, “கடந்த ஏழு வருடங்களாக தனுசு ராசி தனக்கு எதுவும் நடக்கவில்லை, நிம்மதியே இல்லை.. நான் ஏன் வாழ வேண்டும் என்று புலம்பிக் கொண்டே இருந்திருப்பீர்கள்.
அண்மையில், உங்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சனி பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்ந்து விட்டார். அதனால் உங்களுக்கு பெரிய நிம்மதி வந்து சேர்ந்து இருக்கும்.
முதற்கட்டமாக உங்களுக்கு இருந்த பணத் தொல்லை, அவமானங்கள் என எல்லாம் நொறுங்கி தவிடு பொடி ஆகி விடப் போகின்றன. உங்களுக்கு மன நிம்மதி வந்து சேரும்.
3ம் இடத்தில் சனி பகவான் இருப்பதால், உங்களுக்கு உடன் பிறந்த சகோதர சகோதரிகளிடம் இருந்து பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகையால் நீங்கள் அதில் கவனமாக இருக்க வேண்டும். நிச்சயமாக விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்.
நான்காம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு பகவான், உங்களுடைய அம்மாவிற்கு உடல் நல குறைபாடுகளை கொடுப்பார். ஆகையால் அதில் கவனமாக இருங்கள்.
உங்களது ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும், உங்களது பஞ்சமாதிபதி, பாக்கியாதிபதி ஆகியோர் இணைந்து உங்களது ராசியில் இருக்கிறார்.
ராசியாதிபதி உங்களது பஞ்சம ஸ்தானத்தில் உட்கார்ந்து இருக்கிறார். இது உங்களுக்கு மிகச் சரியான நேரம் என்று சொல்லலாம். இதனால் தனுசு ராசிக்கு திரும்பிய இடமெல்லாம் நல்ல செய்தி வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் உங்களது எதிர்ம்றையான எண்ணங்களை மட்டும் தவிர்த்து விட்டு, நிச்சயமாக முன்னேறுவோம் என்று நினைத்து செல்ல வேண்டியதுதான்.
டாபிக்ஸ்