Guru Peyarchi 2024: முன்னேற்றம், வேலை வாய்ப்பு கிடைக்கும்! வருமானம் உண்டா? பரணி நட்சத்திரனருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024: முன்னேற்றம், வேலை வாய்ப்பு கிடைக்கும்! வருமானம் உண்டா? பரணி நட்சத்திரனருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024: முன்னேற்றம், வேலை வாய்ப்பு கிடைக்கும்! வருமானம் உண்டா? பரணி நட்சத்திரனருக்கு குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Apr 03, 2024 11:30 PM IST

பரணி நட்சத்திரத்தில் பிறந்திருக்கும் மேஷம் ராசியினருக்கு குரு பெயர்ச்சி 2024 காலத்தில் கிடைக்கப்போகும் பலன்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

குரு பெயர்ச்சி 2024 பலன்கள் பரணி நட்சத்திரம்
குரு பெயர்ச்சி 2024 பலன்கள் பரணி நட்சத்திரம்

இது போன்ற போட்டோக்கள்

குரு பெயர்ச்சியால் பரணி நட்சத்தினர் பெறும் பலன்கள்

மேஷம் ராசியில் பிறக்கும் பரணி நட்சத்திரன் சுக்கிரனின் நட்சத்திரமாக இருந்து வருகிறது. சூரிய திசை, சந்திர திசையில் இருப்பவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலத்தில் படிப்பு சார்ந்த முன்னேற்றங்களை பெறுவார்கள். குருவின் பார்வை உங்களுக்கு மன அமைதியும், தெளிவும் கொடுக்கும். முயற்சிகளுக்கு ஏற்ற பலனை பெறுவீர்கள்.

வேலை தோடுவோருக்கு எதிர்பார்த்தை வாய்ப்புகள் அமையும். வாகனம் வாங்கும், புதிய நிலம் வாங்கும் யோகம் அமையும். பொருளாதார ரீதியாக பெரிய பிரச்னைகள் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை மீது முழு கவனமுடன் இருக்க வேண்டும்.

பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் திசையில் இருப்பவர்களுக்கு, ராசியபதி திசையாக இருக்கும். ஆனாலும் எதாவது தடை, தாமதங்கள் நிகழும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு உறவினர்கள் மூலமாக இருந்து வந்த பிரச்னைகள் அகலும்.

நகை, ஆடை போன்ற பொருள் சேர்க்கை இருக்கும். பொருளதார வளர்ச்சிக்கான நன்மைகள் அனைத்தும் இந்த திசையில் இருப்பவர்களுக்கு நடக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான காலமாக இருக்கும்.

ராகு திசையில் இருக்கும் நபர்களுக்கு முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். கடன் பிரச்னைகள் தீரும். சுப கடன்கள் வாங்கும் சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் மேன்மை கொடுக்கும்.

குரு திசையில் இருப்பவர்கள் பொருளாதார வளர்ச்சியை பெறுவீர்கள். பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உணவு பழக்கவழக்கங்களில் கவனமாக இருந்தால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம்.

கண், பல், சிறுநீரகம் தொடர்பான ஆரோக்கிய பிரச்னைகள் வரலாம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நோய் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வருபவர்களின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சனி திசையில் இருப்பவர்கள் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். மற்றவர்களுக்கு வாக்குகளை கொடுத்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்.

உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுகும் வருமானத்துடன், புகழும் கிடைக்கும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் உண்டு. நண்பர்களால், உடன்பிறப்புகளால் நன்மை கிடைக்கும்

ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பகவான் கிருஷ்ணர், மகாலட்சுமி, சிவ தரிசனத்தை செய்வதால் உரிய பலனை பெறுவீர்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner