தமிழ் செய்திகள்  /  Astrology  /  New Financial Year 2023-24 Stating Pooja

அடுத்த ஓராண்டு ஓஹோனு வாழ.. இந்த மாதிரி ‘புதிய கணக்கு’ தொடங்கி ‘வாழ்க பணமுடன்’

HT Tamil Desk HT Tamil
Apr 01, 2023 05:17 AM IST

New Financial Year 2023-24: ஆன்மிக ரீதியாக நீங்கள் சிலவற்றை செய்தால், தனவரவும், தொழில் முன்னேற்றமும் கிடைக்கும் என்கிறார்கள் ஜோதிடர்கள்.

புதிய கணக்கும் தொடங்கும் முறையும் லட்சுமி குபேரர் வழிபாடும்
புதிய கணக்கும் தொடங்கும் முறையும் லட்சுமி குபேரர் வழிபாடும்

ட்ரெண்டிங் செய்திகள்

புதிய கணக்கு தொடங்கும் முன்னும், பின்னும் செய்ய வேண்டியது என்ன?

  • அலுவலகமோ, தொழிற்சாலையோ, வியாபார ஸ்தலமோ கணக்கு தொடங்கும் முன் சுத்தம் செய்ய வேண்டும்
  • வெள்ளி அல்லது காப்பர் தட்டில் பச்சை கற்பூரம், உப்பை கலந்து முழுவதும் தெளித்து விடுங்கள்
  • லாவண்டர் வாசம் வீசும் பத்தியோ, சாம்பிராணியோ பொருத்த வேண்டும்
  • வடக்கு திசையில் லட்சுமி-குபேரர் இருக்கும் போட்டோவை வைத்து வழிபட வேண்டும்
  • லட்சுமிக்கு உகந்த மல்லிகைப்பூவை அந்த படத்திற்கு சாற்ற வேண்டும்
  • அந்த தெய்வங்களுக்கு மஞ்சள் நிறத்தில் லட்டு, பூந்தி, செவ்வாழைப்பழம், வாழைப்பூ வைத்து வழிபட வேண்டும்
  • லட்சுமி-குபேர மந்திரங்களை கூறி வழிபாடு நடத்த வேண்டும். 
  • பச்சை நிற குங்கும அர்ச்சனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
  • எலுமிச்சையில் பச்சை நிற குங்குமத்தை வைத்து ‘ஓம் மகாலட்சுமியே நமஹ’ என்று 108 முறை கூறி வழிபட்டால் விஷேசம். 
  • அதே போல ‘ஓம் குபேராய நமஹ’ என்று 108 முறை கூறலாம்.
  • கனகதாரா சோஸ்திரம் ஒருமுறை கூற வேண்டும்
  • மகாலட்சுமி அஷ்டகம் 5 முறை கூற வேண்டும்
  • குபேர துதி 7 முறை கூற வேண்டும்
  • மேற்கண்ட முறையை முடித்து புதிய கணக்கை தொடங்கலாம்
  • மதியம், பணியாளர்களுக்கு நீர், மோர் வழங்க வேண்டும்.
  • கூடுதலாக பெருமாள் கோயிலுக்கு வருவோருக்கு நீர் அல்லது மோர் தானம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
  • வியாபார தடை நீங்க கோயில் பசுக்கு மாலையில் 4 வாழைப்பழம் வழங்கலாம்.
  • புதிய கணக்கை தொடங்கும் நோட்டு புத்தகத்தில் ஸ்ரீ என்கிற எழுத்தை முதலிலும், ஓம் என்கிற எழுத்தை இரண்டாவதும் எழுதுவது உத்தமம்
  • அதன் பின் ஸ்வதிக் முத்திரை வரைந்து, ஸ்ரீஸ்ரீ ஸ்ரீனிவாச வெங்கடாசலபதி என்று எழுத வேண்டும்.
  • ரூ.106யை முதல் கணக்காக உங்கள் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். 
  • இதன் மூலம் ஐஸ்வர்யம் பெருகும் என்று நம்பப்படுகிறது 

நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

கெளரி நல்ல நேரம்: 10:30 மணி முதல் 11:30 மணி வரை

WhatsApp channel

டாபிக்ஸ்