Nellaiappar Temple: நெல்லையப்பர் கோயில் ஆனிப் திருவிழா கொடியேற்றம்.. தேரோட்டம் எப்போது?
Nellaiappar Temple: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் திருக்கோயில் ஆனிப் பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி மாநகரில் அமைந்துள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பு பெற்ற மிகப்பழைமை திருத்தலம் இந்த நெல்லையப்பர் கோயில்.
இது போன்ற போட்டோக்கள்


Jul 26, 2025 06:44 PM2025 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த 3 ராசிகளுக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் இதோ!

Jul 24, 2025 11:53 AMநாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்.. புதனின் ராசி மாற்றத்தால் வரும் அதிர்ஷ்டம்தா!

Jul 12, 2025 11:30 AMசுக்கிரம் தரும் கஷ்டங்கள்.. எந்த ராசிகள் மீது பாயும்.. உங்க ராசி இருக்கா?

Jul 10, 2025 10:29 AMவியாழனின் அருள் பெற ஒரு அற்புத வழி! புதிய கைகுட்டையா வெற்றி உறுதியா!

Jul 08, 2025 10:33 AMஜூலை 18 முதல் புதனின் வக்கிரப் பயணம்: 3 ராசிக்காரர்களுக்கு பிரச்சனைதா!

Jul 08, 2025 10:07 AMஅவர்களுக்கு நல்ல நாட்கள் வரும்.. இந்த ஐந்து ராசிகளுக்கு லட்சுமி கடாக்ஷம் நிச்சயம்
இங்கு ஆண்டுதோறும் ஆனித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவின் போது நடைபெறும் தேரோட்டத்தில் நெல்லை மாநகரம் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
அத்தகைய சிறப்பு மிக்க ஆனிப்பெருந்திருவிழா இன்று (ஜூன் 24) கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி இன்று காலை நெல்லையப்பர் - காந்திமதியம்மன் பூங்கோயில் சப்பரம் உள்வீதியுலா நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு மகாதீப ஆராதனை நடைபெற்றது. அப்போது நமச்சிவாய முழக்கத்துடன் பக்தர்கள் வழிபட்டனர். இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது.
