Navratri Festival: தொடங்கியது நவராத்திரி பூஜை - நவராத்திரி பண்டிகை ஏன்?
நாடு முழுவதும் நவராத்திரி பூஜை கோலாகலமாக இன்று தொடங்கியது.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் நவராத்திரி. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் துர்கா தேவிக்கு பூஜை செய்து, வழிபாடு செய்யப்படும் திருவிழா தான் இந்த நவராத்திரி. நாடு முழுவதும் நவராத்திரி திருவிழா இன்று உற்சாகத்துடன் தொடங்கியது.
இந்தியாவின் வட மாநிலங்களில் துர்கா பூஜையாகவும், தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜையாகவும், கர்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகையாகவும் இந்த விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நவராத்திரி பூஜையில், வீரத்தை அளிக்கும் பார்வதி தேவியையும், செல்வத்தை அளிக்கும் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்கள் கல்வியைக் கொடுக்கும் சரஸ்வதி தேவியும் விரதமிருந்து வழிபாடு செய்யும் பண்டிகை தான் இந்த நவராத்திரி.
கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் முக்கிய நகரங்களில் இந்த பண்டிகை துர்கா பூஜை எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் சாந்தமாக தவம் செய்து கொண்டிருக்கும் துர்கா தேவி, பத்தாம் நாளில் ஆக்ரோஷ பலத்துடன் விஸ்வரூபம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்து மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் நாள்தான், பத்து நாட்கள் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
துர்காதேவி அசுரர்களை அழித்து வெற்றி பெற்ற நாளில் தமிழ்நாட்டில் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி பண்டிகை தொடங்கிய காரணத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் அம்மனுக்குச் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
அனைத்து வீடுகளிலும் கொலு வைத்து நவராத்திரி பூஜையைப் பெண்கள் தொடங்கி விட்டனர். தனது வீட்டின் அருகே குடியிருக்கும் அனைத்து பெண்களையும் அழைத்து துர்கா தேவியின் பெருமைகளை உணர்த்தும் பாடல்களைப் பாடி சிறப்புப் பூஜைகளை பெண்கள் வீடுகளில் செய்யத் தொடங்கி விட்டனர்.
ஒவ்வொரு வீட்டிலும் நவராத்திரி கொலு பண்டிகை கொண்டாடுவதற்குக் காரணம் என்னவென்றால், தங்களது வீடுகளில் கல்வி, செல்வம், வீரம் தழைத்து ஓங்க வேண்டும். குடும்பத்தின் தலைவனாக விளங்கும் கணவன் உடல் நலத்தில் நன்றாக இருக்க வேண்டும். நமது மகிழ்ச்சியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இந்த நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்ரா மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரி கோயிலில் வெகு விமர்சையாக நவராத்திரி தொடக்க விழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்