One Day Navagraha Tour: ஒரே நாளில் நவகிரக சுற்றுலா.. ரூ.740 ரூபாயில் 9 கோயில்களுக்கு பயணம்!
அந்த வெப்சைட்டில் நவகிரக பேக்கேஜ் டூர் என குறிப்பிடப்பட்டு இருக்கும். இதில் தேதி, எத்தனை பேர் பயணிக்கப் போகிறோம் ஆகிய விவரங்களை உள்ளிட்டால், ஏசி பஸ், நான்-ஏசி பஸ்ன்னு இரண்டு ஆப்ஷன் காண்பிக்கும். அதில், சீட்டை செலக்ட் பண்ணிட்டு நம்ம டீடைல் கொடுத்து முன்கூட்டியே நம்ம புக் பண்ண வேண்டும்.
வெறும் ரூ.750 இருந்தால் போதும் இந்த பேருந்தில் ஒரே நாளில் ஒன்பது நவகிரக கோயிலையும் நாம் சென்று தரிசிக்கலாம். சிறப்பு தரிசனத்துல கோயில் சன்னதிக்குள்ளயும் போகலாம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பொதுமக்களுக்கு பயன்தருவது போல் ஒரே நாளில் ஒன்பது நவகிரக கோயிலையும் சுத்தி பார்க்கிறதுக்காக ஒரு சிறப்பு பேருந்தை ஏற்பாடு பண்ணி இருக்காங்க.
இந்த ட்ரிப்பை பொறுத்தவரையிலும் நம்ப எப்படி புக் பண்றது எங்க இருந்து இந்த ட்ரிப் வந்து கிளம்புது எந்தெந்த கோயில நம்ம வந்து சுத்தி பார்க்க போறோம் அப்படின்றது எல்லாமே வந்து ஏ டு இட் ரொம்பவே தெளிவா எளிமையா நம்ம பார்க்கலாம்.
தினமும் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து காலையில் இந்தப் பேருந்து புறப்படுகிறது. https://www.tnstc.in/ வெப்சைட்டில் டிக்கெட் நம்ம புக் பண்ண வேண்டியது இருக்கும்.
அந்த வெப்சைட்டில் நவகிரக பேக்கேஜ் டூர் என குறிப்பிடப்பட்டு இருக்கும். இதில் தேதி, எத்தனை பேர் பயணிக்கப் போகிறோம் ஆகிய விவரங்களை உள்ளிட்டால், ஏசி பஸ், நான்-ஏசி பஸ்ன்னு இரண்டு ஆப்ஷன் காண்பிக்கும். அதில், சீட்டை செலக்ட் பண்ணிட்டு நம்ம டீடைல் கொடுத்து முன்கூட்டியே நம்ம புக் பண்ண வேண்டும்.
பயணக் கட்டணம் எவ்வளவு
ஏசி பஸ்ஸில் வரியுடன் சேர்த்து ரூ.1403 ஆகும். நான் ஏசி பஸ் என்றால் ரூ.750 பிளஸ் வரி எல்லாம் சேர்த்து ரூ.799 வரும்.
கும்பகோணம் பஸ் ஸ்டாண்ட் நம்ம வந்தால், நவகிரக சுற்றலா சிறப்பு ரதம் என இந்த பஸ் ரெடியா இருக்கும்.
நம்ம ஆன்லைன்ல புக் பண்ணோம் இல்லையா அதோட டிஎன்ஆர் எண்ணை நம்ம அவங்க கிட்ட சொன்னோம் அப்படின்னா அவங்க நம்மளுக்கு டிக்கெட் நம்ம கையில கொடுத்துருவாங்க.
இந்த டிரிப்போட இன்சார்ஜ் நமக்கு வழிகாட்டுதல்களை வழங்குவார்கள்.
வழிகாட்டு உடன் இருப்பார்
இதோடு பஸ்ஸில் ஏறி அமர்ந்தவுடன் ஒரு பை கொடுப்பார்கள். அதில், தொப்பி ஒன்றும், நவகிரக வழிகாட்டி ஒன்றும் இருக்கும்.
சிறப்பு சன்னதிக்கு செல்வதற்கான அடையாளம்தான் இந்தத் தொப்பி. எந்தெந்த கோயில் செல்கிறோம். அந்தக் கோயிலின் சிறப்புகள் என்னென்ன என்பதை பற்றி தெளிவாக கைடு நமக்கு சொல்லிக் கொண்டே வருவார்கள்.
தினமும் காலையில் 5 மணிக்கு இந்தப் பேருந்து கிளம்புகிறது. இரவு 8 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் நம்மை இறக்கிவிட்டுவிடுகிறார்கள்.
முதல் கோயில், திங்களூரில் உள்ள கைலாசநாதர் கோயிலுக்கு செல்வோம்.
சந்திரான் ஏற்படக் கூடிய தீங்குக்கு இந்தக் கோயிலில் வழிபாடு செய்தால் நிவாரணம் கிடைக்கும்.
அடுத்து குரு பரிகார ஸ்தமான ஆலங்குடி ஆகும். ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலுக்கு செல்வோம். இந்தக் கோயிலைப் பொருத்தவரை குரு பகவானுக்குரிய சிறப்பு ஸ்தலம்.
நாக தோஷம் இருப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் நல்லது நடக்கும். திருமணத் தடை, கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பவர்களும் இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள்.
இந்தக் கோயிலில் காலையில் டிபன் கொடுத்து விடுவார்கள்.
அடுத்ததாக நாகநாத சுவாமி கோயில் அமைந்துள்ள திருநாகேஸ்வரத்துக்கு அழைத்து செல்வார்கள். நாக தோஷ நிவாரணம் கிடைக்க இந்தக் கோயிலில் வழிபாடு செய்வார்கள்.
நாலாவதாக செல்லும் இடம் சூரிய பகவானோட சூரியனார் கோயில். அருள்மிகு சிவ சூரியப் பெருமாள் திருக்கோயிலுக்கு தான் அழைத்துச் செல்கிறார்கள். இந்த கோயிலை பொறுத்தவரையிலும் சோழர் காலத்துல கட்டுன ஒரு திருக்கோயில்தான்.
நவகிரக ஸ்தலங்களிலேயே சூரிய பகவானுக்கு முதன்மை ஸ்தலமா வந்து இதை சொல்றாங்க. சூரிய திசை சூரிய புத்தி சூரிய பார்வைன்னு சூரியனால் ஏற்படக்கூடிய அந்த தோஷம் எல்லாம் நீங்குறதுக்காக வழிபடக்கூடிய ஒரு ஸ்தலம்தான் இது.
ஏழரை சனி அஷ்டம சனி ஜென்ம சனி எல்லாம் சொல்றாங்க இல்லையா இதுக்கெல்லாம் முறைப்படி இந்த இடத்துக்குள்ள வந்து நம்ம வணங்கிணோம் என்றால் அதுக்கான நிவர்த்தி நமக்கு கிடைக்கும். அனைத்து நவக்கிரக சன்னதியும் இந்தக் கோயிலில் இருப்பது தனிச்சிறப்பு.
அடுத்த செல்லும் கோயில் சுக்கிர ஸ்தலமான கஞ்சனூர்ல இருக்கக்கூடிய அருள்மிகு அக்னீஸ்வரர் கோயில்.
சுக்கிரனுக்கு தனி சன்னதி எதுவும் கிடையாது. சிவபெருமானே சுக்கிரன் வடிவத்துல இருக்கிறதுனால திருமண தடை நீங்குறதுக்கு பரிகாரம் செய்யக்கூடிய ஸ்தலமாக இது விளங்குகிறது.
அடுத்து செவ்வாய் ஸ்தலமான வைதீஸ்வரன் கோயில். செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வழிபட வேண்டிய திருத்தலம். இரண்டாயிரம் வருடம் பழைமையான தலம் இது. 5 கோபுரங்கள் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும் ஸ்தலம். இங்கு மதிய உணவு வழங்கப்படும். அடுத்து கேது ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ளது.
அடுத்த புதன் ஸ்தலமான திருவென்காடில் இருக்கக்கூடிய சுவேதரண்யேஸ்வரர் சுவாமிகளுடைய திருக்கோயில்தான்.
சிவபெருமான் சுயம்பு மூர்த்தியா இங்கு அருள் தருகிறார். அடுத்து சனி பகவானுக்கு உரிய புதுச்சேரி காரைக்கால்ல திருநள்ளாரில் இருக்கக்கூடிய ஸ்தலத்திற்கு வந்திருக்கிறோம்.
டாபிக்ஸ்