சனி - புதன் சேர்க்கை.. ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் நவ பஞ்சம ராஜயோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சனி - புதன் சேர்க்கை.. ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் நவ பஞ்சம ராஜயோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிகள்!

சனி - புதன் சேர்க்கை.. ஆகஸ்ட் மாதத்தில் உருவாகும் நவ பஞ்சம ராஜயோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிகள்!

Karthikeyan S HT Tamil
Published Jun 09, 2025 03:56 PM IST

சனி மற்றும் புதன் சேர்க்கையால் உருவாகும் நவ பஞ்சம ராஜயோகத்தால் அபரிவிதமான அதிர்ஷ்டம் பெறப்போகின்ற மூன்று ராசிகள் யாரென்று தெரிந்துகொள்வோம்.

சனி - புதன் சேர்க்கை.. விரைவில் உருவாகும் நவ பஞ்சம ராஜயோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிகள்!
சனி - புதன் சேர்க்கை.. விரைவில் உருவாகும் நவ பஞ்சம ராஜயோகம்.. அதிர்ஷ்டம் பெறப்போகும் மூன்று ராசிகள்!

இது போன்ற போட்டோக்கள்

சனி மற்றும் புதன் இருவரும் சேர்ந்து வருவதால் நவ பஞ்சம யோகம் உருவாக உள்ளது. நவ பஞ்சம ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இருப்பினும் அதிர்ஷ்டம் பெறக்கூடிய 3 ராசிகள் உள்ளன. அந்த அதிர்ஷ்டக்கார ராசிள் யாரென்று தெரிந்துகொள்வோம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு நவ பஞ்சம ராஜயோகம் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. ஊதிய உயர்வும் வரலாம். பணியிடத்தில் பெரிய பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்பு உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. பழைய முதலீடுகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். நான்கு சக்கர வாகனங்களையும் வாங்க வாய்ப்புள்ளது. அரசு வேலைக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நவ பஞ்சம ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். இந்த ராஜயோகத்தால் இந்த ராசியினரின் உறவுகள் வலுவடையும். தொழிலில் கூட சாதகமாக வாய்ப்புகள் இருக்கும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கடிதம் வர வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகளும் முடிவடையும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு நவ பஞ்சம ராஜயோகம் பல நன்மைகளைத் தரும். வருமானமும் அதிகரிக்கலாம். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் எந்த வேலை செய்தாலும் வெற்றி கிடைக்கும். சேவை நடவடிக்கைகளிலும் தீவிரமாக பங்கேற்பீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.