தமிழ் செய்திகள்  /  Astrology  /  Narada Muni Narada Muni Ifamous In Hindu Traditions As A Travelling Musician And Storyteller

Narada Muni: ‘இவர் அசுரர்களுக்கும் அன்பர், தேவர்களுக்கும் நண்பர்’

Manigandan K T HT Tamil
Feb 21, 2024 05:15 AM IST

இவரைப் பற்றிய மகிமையை, பாகவதம் கந்தபுராணம், மாயூரபுராணம், சிவ மகா புராணம், திருவிளையாடல் புராணம், தணிகை புராணம், விநாயக புராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற, பல புராணங்கள், இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன.

நாரத மாமுனி
நாரத மாமுனி (deviantart)

ட்ரெண்டிங் செய்திகள்

இவரைப் பற்றிய மகிமையை, பாகவதம் கந்தபுராணம், மாயூரபுராணம், சிவ மகா புராணம், திருவிளையாடல் புராணம், தணிகை புராணம், விநாயக புராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற, பல புராணங்கள், இதிகாசங்கள் எடுத்துரைக்கின்றன.

"மனத்தூய்மை என்பது கடைசியாக யதார்த்தத்தை அடைவதற்கு,இன்றியமையாத ஒரு நிபந்தனை" என சொல்லுவார் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர்.

அப்படியொரு மாபெரும் மனத்தூய்மையை வாழ்வின் நடைமுறையாகப் பின்பற்றியவர் ஜைகிஷவ்ய மாமுனிவர்.

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிழ்சிரிப்பும், பணித்த சடையும், பவளம் போல் மேனியில் பால்வெண் நீறும்,இனித்தமுடைய, எடுத்த பொற்பாதமும் காண,முனிவர்,அரிய தியான நிஷ்டையில் அமர்ந்து,தன்நிலை மறந்தார்.

அவரின் தவத்தின் உறுதி, ஒரு பரிமாணத்தின் எல்லையை தாண்டியதை கண்ட, பிரம்மன், இந்திரன் முதலானோர் ,அச்சம் கொண்டு தம் வாழ்வுக்கு ஏதோ இடையூறு வருமோ எனக் கருதினார்கள். அந்த முனிவர் முன் தோன்றி, அவர் விரும்பியதைத் தருவதாக வலிய வந்து கூறினார்கள்.

அதைக் கேட்டு, முனிவர், அவர்களிடம் இருந்து எந்த வித பயனையும் எதிர்பார்த்து, தான், தவம் இருக்கவில்லை ,எனவும், சிவபெருமானின் திருவடிகளை அடையவே, தவம் புரிகிறேன் என்றும் சொல்ல,அவர்கள் மகிழ்ந்து,திரும்பினர்.

நெடுங்காலம் ,அசைவற்ற நிலையில் இருந்து விட்டதால் முனிவர்மேல் புற்று வளர்ந்து ,மண்மேடிட்டது. ஒரு நாள் நாரதர், விண் வழியில் சென்று கொண்டிருந்தவர்,இதைத் தமது ஞான திருஷ்டியால் அறிந்து, கீழிறங்கி வந்தார்.

நேராக முனிவரிடம் வந்து, சகல உலகமும் புகழும் அவருடைய நிஷ்டையைக் கண்டு ,தானும்,மிக பெருமைப்படுவதாக கூறி, பெரும் பாக்கியம் பெற்றேன் எனவும் கூறி, சிறிது நேரம், அளவளாவி விட்டு, எம்பெருமான் சிவபெருமானை தரிசிக்க, திருக்கைலாய மலைக்குத் திரும்பினார்.

நமது மகதியாழை மீட்டிப் பாடி பணிந்து, வந்த நாரதர், சிவபெருமானிடம், ஜைகிஷவ்ய முனிவர் பற்றிக் கூறி, அவரது விண்ணப்பம் குறித்து சொல்லி திருவருள் புரிய வேண்டினார். "சிறிதோ,பெரிதோ, எடுத்துக் கொண்டச் செயலை, முழு ஆர்வத்துடன் செய்" எனும் சாணக்கியர் சொல்லங்கே அரங்கேற்றம் ஆகியது.‌

"கடவுள் நமக்கு அருள் புரிவதில் நிகரற்றவன்" என்பார் வாரியார் சுவாமிகள். அதன்படி, அந்த முனிவருக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார். சிவநேசரைத் தமது பக்தியால் தொழுது, இதற்கு காரணமான நாரதருக்கும் நன்றி கூற, சிவன், அவருக்கு பேரருள் சுரந்து,சிவபதம் அளித்து ஆனந்தம் கொண்டார்‌.

இதைத்தான், நமது, திருவள்ளுவரும், இறைவன் திருவருள் பெற்றவர்,பிறவித் துன்பங்களிலிருந்து, விடுதலை பெறுவர். ஏனையோர், பிறவித் துன்பமாகிய கடலுள் ஆழ்ந்து போவார் என்பதை குறிக்க

"பிறவிப் பெருங்கடல்

நீந்துவர் ,நீந்தார் இறைவனடி சேராதார்" என்று கூறியிருக்கிறார்.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை.

 

WhatsApp channel

டாபிக்ஸ்