தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Rahu Karma: ‘பூசம்.. விசாகம்.. சதயம்.. நட்சத்திரத்தில் பிறந்தவர்களா?’ ராகு கர்மா ஜாக்கிரதை!

Rahu Karma: ‘பூசம்.. விசாகம்.. சதயம்.. நட்சத்திரத்தில் பிறந்தவர்களா?’ ராகு கர்மா ஜாக்கிரதை!

Stalin Navaneethakrishnan HT Tamil
Aug 02, 2023 09:18 AM IST

பயண குழப்பத்தில் இருப்பவர்களுக்கு உதவினால், ராகு கர்மா கொண்டவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

ராகு பகவானின் கர்மா பெற்ற நட்சத்திரங்கள்
ராகு பகவானின் கர்மா பெற்ற நட்சத்திரங்கள்

இந்த நட்சத்திரக்காரர்கள் எந்த மாதிரி விசயத்தில் கர்மாவை குறைக்கலாம், எந்த பரிகாரம் மூலம் அவர்களின் கர்மாவை தீர்க்க முடியும் என்பதை பார்க்கலாம். 

பயண குழப்பத்தில் இருப்பவர்களுக்கு உதவினால், ராகு கர்மா கொண்டவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உதாரணத்திற்கு, முகவரி தெரியாமல் யாராவது அழைந்து திரிந்தால், அவர்களுக்கு வழிகாட்டினால் கூட போதும். போக்குவரத்திற்கு உதவுவது, டிக்கெட் புக் செய்து தருவது, பாஸ்போட், விசா எடுக்க நினைப்பவர்களுக்கு உதவுவது போன்ற உதவிகளை செய்தால் போதும். பயணம் தொடர்பான உதவிகளில் யாருக்காவது சிக்கல் இருந்தால், அதை தீர்ப்பது தான் ராகு கர்மாவின் பெரிய பரிகாரம்.

ராகு கர்மாவில் இருப்பவர்கள், டிரைவரை டார்ச்சர் செய்வது, அவரை கவனிக்காமல் இருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். டிரைவர் தான் ராகு. அதை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார்கள். 

உறவினர்கள் வழியில் ராகு கர்மா கொண்டவர்களுக்கு பெரிய பிரச்னை இருக்காது. ஆனாலும் மூன்று நட்சத்திரங்களிடம் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். 

திருவாதிரை, ஸ்வாதி, சதயம் நட்சத்திரங்களிடம் ராகு கர்மா இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். பூசம், விசாகத்தில் பிறந்தவர்கள் வீட்டில் யாராவது இறந்திருந்திருந்தால், அவர்களுக்கு ஒழுங்காக திதி கொடுத்திருக்க மாட்டார்கள். அது விடுபட்டு போயிருக்கும். ஆண்டு தோறும் அந்த கடமையை வாரிசுகள் செய்ய வேண்டும். அது ராகுக்கு செய்யும் பெரிய பரிகாரம். இது தான் ஆன்மிக பரிகாரம் என்கிறார்கள். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்