தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Nail Astrology: உங்கள் நகங்களில் தோற்றம் சொல்லும் குணாதிசயங்கள் என்ன? நகங்கள் ஜோதிட ரகசியம் இதோ

Nail Astrology: உங்கள் நகங்களில் தோற்றம் சொல்லும் குணாதிசயங்கள் என்ன? நகங்கள் ஜோதிட ரகசியம் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 14, 2024 07:15 AM IST

நகம் நீளமாகவும் மெல்லியதாகவும் இருப்பவர்கள், நகம் சிதைந்து, ஒழுங்கற்று இருப்பவர்கள் குணாதிசயங்கள் எப்படி இருக்கும். நகங்களில் தோற்றம் சொல்லும் குணாதிசயங்கள், நகம் குறித்து ஜோதிடத்தில் கூறப்படும் விஷயங்களை, நகங்கள் ஜோதிட ரகசியம் குறித்தும் பார்க்கலாம்

உங்கள் நகங்களில் தோற்றம் சொல்லும் குணாதிசயங்கள் என்ன
உங்கள் நகங்களில் தோற்றம் சொல்லும் குணாதிசயங்கள் என்ன

ஜோதிடத்தில் நகங்கள் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. சனி பகவான் நகங்களின் அதிபதி என்று நம்பப்படுகிறது. நகங்கள் அழகைக் குறிக்கிறது. சுக்கிரன் அழகின் தெய்வமாக இருக்கிறார். நகங்களின் வடிவத்தை வைத்தே ஒரு நபரின் குணாதிசயங்கள், அவரது தன்மையை அறியலாம்.

நமது உடல் உறுப்புகள் நமது ஆளுமையைக் குறிக்கின்றன என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. நெற்றி, கண், மூக்கு, காது போன்ற ஒவ்வொரு உடல் உறுப்பின் பகுதியும், அவற்றின் இயல்புகளை நமக்கு வெளிப்படுத்துகிறது.

ஜோதிடத்தில் நகங்களும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஒருவரது நகங்களின் வடிவம் அவரின் ஆளுமையை வெளிப்படுத்துகிறது. நீளமான, மெல்லிய நகங்கள் மற்றும் ஒழுங்கற்ற வடிவிலான நகங்களைக் கொண்டவர்களின் குணாதிசயங்களை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நகம் நீளமாகவும் மெல்லியதாகவும் இருப்பது

நகங்கள் நீளமாக, ஆனால் மெல்லியதாக இருக்கும் நபர்கள் சிறிய விஷயங்களை தீவிரமாக எடுத்துக்கொள்பவர்களாக இருப்பார்களாம். பொதுவாக அவர்கள் அச்சம் நிறைந்த சூழலில் வளர்வதோடு, நல்ல முயற்சிகள் செய்தாலும் அதற்கான பலன் வரும்போது மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

நல்ல சிந்தனை இருப்பவர்களாகவும், தங்கள் கவலைகளை சுற்றி இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் தங்களது ஆசைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். வாழ்க்கையில் ஏமாற்றத்தை அதிகம் எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்களின் மனதை நன்கு புரிந்து கொண்டவர்கள் இருந்தால், அவர்களிடம் நெருக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். தன்நம்பிக்கையை அதிகரிக்கும் சூழலில் நேரத்தை செலவிடுவார்கள்.

மிக எளிமையான யோசனைகள் கூட இவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாது. இருப்பினும் சோம்பேறிகள் அல்ல. எடுத்துக்கொண்ட வேலையை அவ்வளவு எளிதாக தொடங்குவதில்லை. தோல்வியை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வார்கள்.

பொதுவாக இவர்களின் ஜாதகத்தில் சந்திரன் விருச்சிக ராசியில் இருக்கிறார். தொடர் முயற்சியால் வேலையில் வெற்றி பெறுவார். வாழ்க்கைத்துணையின் உதவியால் தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் தேவைப்படுவராக இருப்பார்.

மன உளைச்சல் மற்றும் அச்சம் தவிர வேறு எந்த நோயும் அவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நன்கு கவனம் செலுத்துவார்கள். இவர்களிடம், ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகம். விடாமுயற்சியால் எதிர்பார்த்த பலனை பெறுவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளின் அனுதாபம் அல்லது நன்மதிப்பை பெறுபவராக இருப்பர்.

நகம் சிதைந்திருப்பவர்

நகங்கள் நீளமாக இருந்தாலும் சரியான வடிவத்தில் இல்லாமல் இருப்பவர்கள் மற்றவர்களின் வேலையை விமர்சிப்பார்களாக இருப்பார்கள். அவர்களின் பகட்டு, கிண்டல் பேச்சு கடுமையான வார்த்தைகள் மற்றவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும் புத்திசாலித்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள்.

பொதுவாக அவர்களால் யாருடனும் எளிதாக பழக முடியாது. ஆனால் மற்றவர்கள் அவரை அன்புடனும் நம்பிக்கையுடனும் பார்க்கிறார்கள். அதனால் அவரது வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக இருக்கும்.

வசதிகள் இருந்தும் மன அமைதி இல்லாமல் தவிப்பார்கள். இதற்குக் காரணம் அவர்களின் உயர்ந்த ஆசைகளும் அபிலாஷைகளும்தான். தங்கள் தவறுகளை மறைக்க மற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளை பெரிதாக்குவதில் கில்லாடியானவர்கள்.

இவர்களுக்கு அசாத்திய தைரியம் உண்டு. எந்த ஒரு ஆபத்தான சூழ்நிலையிலும் எதிர்கொண்டு தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள். தனக்குப் பயன் தராத எந்த வேலையும் செய்வதில்லை. நிதி பற்றாக்குறை எப்போதும் இருக்காது. மனைவியுடன் நல்ல உறவு இருப்பார்கள். குழந்தைகளுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரானவர்கள் இவர்கள்.

எதிர்கால மகிழ்ச்சிக்காக பணம், பொருளை சேமிப்பார்கள். நிதி விஷயங்களில் யாரையும் ஏமாற்றமாட்டார்கள். தேவைப்படுவோருக்கு பண உதவி செய்வீர்கள் அவர்களின் மனதுக்கு நெருக்கமாவார்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.