Nag Panchami 2024: ஆகஸ்ட் 9 நாக பஞ்சமி.. குலம் காக்க ஓடி வருகிறாள் நாக தேவதை! - நாக பஞ்சமி வழிபாடு எப்படி செய்வது?
Nag Panchami 2024: சாவன் மாதத்தின், சுக்ல பக்ஷாவின், பஞ்சமி திதி 9 ஆகஸ்ட் 2024 அன்று காலை 8:15 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் காலை 06:09 மணிக்கு அன்று முடிவடையும். - நாக பஞ்சமி வழிபாடு!

நாக பஞ்சமி நாள் அன்று எவ்வாறான வழிபாடை மேற்கொள்வது நல்லது என்பது குறித்து இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.
சனாதன தர்மத்தில், சாவன் மாதத்தின், சுக்ல பக்ஷாவின் ஐந்தாவது நாளில், நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிவபெருமானுடன் சேர்ந்து நாக தேவதையும் வழிபட படுகிறாள். நாக பஞ்சமி நாளில் நாக தேவதையை வணங்குவது வாழ்க்கையின் அனைத்து துக்கங்களையும், துன்பங்களையும் நீக்குகிறது. அத்துடன் அது வீட்டின் உறுப்பினர்களையும் பாதுகாக்கிறது.
நாக பஞ்சமி நாளில், நாக தேவதையின் 8 வடிவங்களான வாசுகி, ஐராவதம், மணிபத்ரா, காளியா, தனஞ்சயன், தக்ஷக், கார்கோட்காஸ்யன் மற்றும் திருதராஷ்டிரன் வழிபடப்படுகின்றன. பஞ்சாங்கத்தின் படி, இந்த ஆண்டு வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி நாக பஞ்சமி கொண்டாடப்பட இருக்கிறது. நாக பஞ்சமி நாளில் வரக்கூடிய சுப நேரம் மற்றும் வழிபாட்டு முறையை தெரிந்து கொள்வோம்.
நாக பஞ்சமி எப்போது கொண்டாடப்படுகிறது?
இந்து நாட்காட்டியின்படி, இந்த ஆண்டு, சாவன் மாதத்தின், சுக்ல பக்ஷாவின், பஞ்சமி திதி 9 ஆகஸ்ட் 2024 அன்று காலை 8:15 மணிக்கு தொடங்கி, அடுத்த நாள் காலை 06:09 மணிக்கு, அதாவது 10 தேதி ஆகஸ்ட் 2024 அன்று முடிவடையும். ஆகவே, நாக பஞ்சமி 9 ஆகஸ்ட் 2024 அன்று கொண்டாடப்படுகிறது.
நாக பஞ்சமி அன்று : இந்த ஆண்டு, நாக பஞ்சமியை முன்னிட்டு, சிவ யோகம், சித்த யோகம், சத்ய யோகம், பாவ் மற்றும் பலவ், கரண் யோகா மற்றும் ஹஸ்த நட்சத்திரம் ஆகியவற்றின் மங்களகரமான கலவையில் நாக பஞ்சமி கொண்டாடப்பட இருக்கிறது.
பூஜை நேரம்: நாக பஞ்சமி நாளில், காலை 06:01 முதல் 08:37 வரை சிறந்த வழிபாட்டு நேரமாக இருக்கிறது. இந்த நேரத்தில், நீங்கள் சிவபெருமானுடன் இணைந்து நாகதேவதையை வணக்கும் பொழுது, உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
எப்படி வழிபாடு செய்ய வேண்டும்?
நாக பஞ்சமி நாளில், காலையில் குளித்து முடித்த பிறகு சுத்தமான ஆடைகளை அணியுங்கள். சிவலிங்கத்திற்கு நீர் படைத்து சிவனை வழிபடுங்கள். இதற்குப் பிறகு, வீட்டின் நுழைவு வாயில், பூஜை அறை மற்றும் சமையலறைக்கு வெளிக்கதவை சுண்ணாம்பு கொண்டு பெயிண்ட் அடியுங்கள்.
நாக கடவுளின் சின்னத்தை வாங்கிக்கொள்ளுங்கள். தொடர்ந்து பூஜையை தொடங்கி, பழங்கள், பூக்கள், ஊதுபத்தி, பச்சை பால், நெய்வேத்தியம் படைத்து வழிபடுங்கள். இறுதியாக, நாகதேவதையின் ஆரத்தி செய்யுங்கள்.ஆரத்தி செய்த பிறகு, நீங்கள் நாக பஞ்சமியின் கதையை பாடலாக பாடலாம். முடிந்தால், வழிபாடு முடிந்த பிறகு, ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்து வயலிலோ அல்லது பாம்பு வர வாய்ப்புள்ள இடத்திலோ வைக்கவும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்