Moola Trigona யோகம்: தூரத்தில் இருக்கும் புதன் - சுக்கிரன் - சனியின் இருப்பிடத்தால் சத்தமின்றி சாதிக்கும் ராசிகள்
Moola Trigona: மூல திரிகோண ராஜயோகம்: தூரத்தில் இருக்கும் புதன் சுக்கிரன் சனியின் இருப்பிடத்தால் சத்தமின்றி சாதிக்கப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.
Moola Trigona: துலாம் ராசியில் சுக்கிர பகவான் சஞ்சரித்து வரும் நிலையில், செப்டம்பர் 23 முதல் புதன் பகவானும்; கன்னி ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கியிருக்கிறார். அதேபோல், கும்பத்தில் சனி பகவானும் ஆட்சி செய்து வருகின்றார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகத்தின் சக்தியைக் கூறும் இருப்பிடமாக, மூல திரிகோண அமைப்பு இருக்கிறது. மூல திரிகோண அமைப்பு கும்பம் ஆகும்.
புதன் பகவானுக்கு மூல திரிகோண வீடு, கன்னி. சுக்கிர பகவானுக்கு மூல திரிகோண வீடு, துலாம். இவ்வாறு மூல திரிகோண வீட்டில் சனி, புதன், சுக்கிரன் அமர்ந்து இருப்பதால் 5 ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கின்றன. இவ்வாறு அற்புதமான பலன்களைக் கிடைத்து ஜெயிக்கப்போகும் ஐந்து ராசிகள் குறித்துக் காண்போம்.
மூல திரிகோண வீட்டில் சனி, புதன், சுக்கிரன் அமர்ந்து இருப்பதால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள்
மேஷம்:
மூல திரிகோண வீட்டில் சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் அமர்ந்து இருப்பதால், மேஷம் ராசியினரின் செல்வம் அதிகரிக்கும். இந்த காலத்தில் வெகுகாலமாக செய்ய நினைத்து மனதில் ஒளித்து வைத்த ஆசைகளை தைரியமாக முயற்சித்தால் அது நடந்தே தீரும். வெகுநாட்களாக பிசினஸில் கால் பதிக்க நினைத்தவர்களுக்கு இது உற்ற தருணம். பணியிடத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். அண்ணன் - தம்பிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
கன்னி:
கன்னி ராசியின் அதிபதி புதன். அதனால், தொழில் முனைவோராக இருக்கும் கன்னி ராசியினருக்கு நல்ல பலன் கிடைக்கும். சமீப காலமாக வீட்டில் இருந்த பிரச்னைகளால் உண்டான பண இழப்புகள் குறையும். உங்களுக்கு கிடைக்காத லாபம் இந்த தருணத்தில் கிடைக்கும். தொழில் செய்யும் நபர்களுக்கு மூவ்மென்ட் நன்றாக இருக்கும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
துலாம்:
மந்தமாக இருந்த துலாம் ராசி தொழில் முனைவோருக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி இந்த காலத்தில் உண்டு. மாற்றி யோசித்து திட்டம் தீட்டி, முயற்சித்தால் வெற்றிபெறுவது உறுதி. பணியிடத்தில் உங்களை வெறுத்தவர்கள் எல்லாம், உங்கள் நல்ல குணம் கண்டு திரும்ப சேர்வர். இதனால் பல நல்ல பணிவாய்ப்புகள் கிட்டும்.
கும்பம்:
கும்ப ராசியினரின் கடுமையான உழைப்பு இந்த காலத்தில் பணமாக பொருளாக மாறும். வியாபாரம் செய்பவர்கள் புதிய நபர்களால் ஆதாயத்தைப் பெறுவீர்கள். வெகுநாட்களாக உங்களுக்கு இடையூறு செய்வதர்களை நாசூக்காக கையாள்வீர்கள். உங்கள் செயலில் புது உத்வேகம் பிறக்கும்.
மீனம்:
மீன ராசியினருக்கு வம்பு வழக்குகளில் இருந்து தீர்வு கிடைத்து சாதகமான முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் மறையும். உங்களை வேண்டாம் என்று ஒதுக்கியவர்கள் இந்த காலத்தில் உங்களது நல்ல எண்ணங்களை அறிந்துகொண்டு, மீண்டும் சேர்வர். குடும்பத்தில் இருந்த கண் திருஷ்டி குறைந்து, அமைதி நிலவும். மீன ராசியினருக்கு, பணியிடத்தில் இருந்த டென்ஷன்கள் குறையும். முன்பே இருந்த சிக்கல்கள் தீர்ந்து சுமுகமான சூழல் உண்டாகும். வெகுநாட்களாக பெண்டிங் வைத்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மிகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
டாபிக்ஸ்