Mars Transit: மிதுன ராசிக்குள் செவ்வாய்..! ஆகஸ்ட் 26 முதல் 54 நாள்கள் பணமழை கொட்டும் ராசிகள் - தொழிலில் லாபம், மரியாதை
Horoscope Mars Transit to Gemini: மிதுன ராசிக்குள் செவ்வாய் நுழைவதால் மூன்று ராசிக்காரர்கள் தொழிலில் லாபம், மதிப்பும் மரியாதையும் பெற இருக்கிறார்கள். ஆகஸ்ட் 26 முதல் 54 நாள்கள் பணமழை கொட்டும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்
செவ்வாய் இயக்கம் சுபமாக இருந்தால் தொழிலில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் மேஷம் உள்ளிட்ட ராசிக்காரர்கள் நல்ல நாள்கள் தொடங்கவுள்ளது. இந்த ராசிகளை செவ்வாய் எப்படி மாற்றப் போகிறார் என்பதை பார்க்கலாம்.
நவக்கிரகங்களின் தளபதி
ஒன்பது கிரகங்களில் செவ்வாய் மட்டுமே கிரகங்களின் தளபதி அந்தஸ்து பெற்ற கிரகமாகும். செவ்வாய் கிரகத்தின் இயக்கம் அவ்வப்போது மாறுகிறது. செவ்வாயின் நிலை வலுவாகவோ அல்லது சுபமாகவோ இருந்தால், அந்த நபருக்கு செய் தொழிலில் லாபத்துடன், அதிக மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.
செவ்வாய் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
அந்த வகையில் செவ்வாய் பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும்பொழுது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார்.
ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி
செவ்வாய் தற்போது சுக்கிரன் ராசியில் அமர்ந்து, விரைவில் புதன் ராசியில் பிரவேசிக்க உள்ளார். கடந்த ஜூலை 12இல் சுக்கிரன் அதிபதியான ரிஷப ராசிக்குள் நுழைந்தார். சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய இவர்கள் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.
தற்போது ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி இருக்கும். அக்டோபர் 19 வரை செவ்வாய் இந்த லக்னத்தில் இருக்கிறார் செவ்வாயின் மிதுன சஞ்சாரத்தால் எந்தெந்த ராசிக்காரர்கள் சூரியனைப் போல் பிரகாசிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்வோம்-
துலாம்
செவ்வாய் மாற்றம் துலாம் ராசியினருக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பணம் வரவு தாரலமாக இருக்கும். உங்களின் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும்.
பணி நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். வாழ்க்கை துணைக்கு முழு ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் செவ்வாய் சஞ்சாரத்தால் நல்ல பலன்களைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் நீங்கள் நேர்மறை ஆற்றல் நிறைந்தவராக இருப்பீர்கள். வேலையில் உங்கள் கவனம் இருக்கும்.
மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் நம்பிக்கையுடனும் உணர்வார்கள். ஆன்மிக விஷயங்களில் மனம் இருக்கும். உங்கள் மன ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அதேபோல் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு மிதுன ராசியில் செவ்வாய் சஞ்சாரத்தால் பெரும் பாக்கியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
தொழிலில் உங்கள் பணி பாராட்டப்படும், மேலும் உங்கள் மரியாதையும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பீர்கள். குடும்ப ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலைத்திருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. விரிவான மற்றும் கூடுதல் தகவலுக்கு, தொடர்புடைய துறையில் நிபுணரை அணுகவும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்