Money Luck: வீட்டில் எப்போதும் பணமழை பெய்ய வேண்டுமா.. இதை மட்டும் செய்யுங்க!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Money Luck: வீட்டில் எப்போதும் பணமழை பெய்ய வேண்டுமா.. இதை மட்டும் செய்யுங்க!

Money Luck: வீட்டில் எப்போதும் பணமழை பெய்ய வேண்டுமா.. இதை மட்டும் செய்யுங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Jan 20, 2024 09:44 AM IST

உப்பு உப்பை தரையில் கொட்டாதீர்கள், இதில் கவமனாக இருந்தாலே லட்சுமி தேவி உங்களை கவனித்துக் கொள்வார் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

லட்சுமி கடாட்சம்
லட்சுமி கடாட்சம்

சாஸ்திரத்தின் படி, வீட்டில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும், லட்சுமி கடாக்ஷம் எப்போதும் உங்கள் மீது இருக்க என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

பணம்

வீட்டிற்கு வருபவர்களுக்கு பணம் கொடுக்கும்போது அவர்கள் வாசலில் நிற்க விட வேண்டாம். அவர்களை வீட்டிற்குள் அழைத்து கொடுக்க வேண்டும் அல்லது நாம் வெளியே சென்று பணம் செலுத்த வேண்டும்.

உப்பு

உப்பை தரையில் கொட்டாதீர்கள், இதில் கவமனாக இருந்தாலே லட்சுமி தேவி உங்களை கவனித்துக் கொள்வார் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை.

அரிசி

அரிசியை தரையில் பரப்பக்கூடாது, அரிசியை கழுவும்போது கூட அரிசி தண்ணீரை தரையில் கொட்ட விடாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

குப்பை

வீட்டை துடைத்த பின் எந்த மூலையிலும் குப்பைகளை குவிக்காதீர்கள். அதை அகற்றி குப்பைத் தொட்டியில் போட்டு விட வேண்டும்.

மாலை 5.30 மணிக்கு மேல் குப்பைகளை துடைக்க வேண்டாம். நீங்கள் அதை துடைக்க வேண்டும் என்றால், அதை கொட்ட வேண்டாம். அதை ஒரு டஸ்ட்பின் அல்லது பேப்பரில் போட்டு மறுநாள் எடுத்து வெளியில் கொட்ட வேண்டும்.

அதேபோல் வீட்டிற்குள் தூசி, சிலந்தி வலைகள் கட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி சரிபார்த்து சுத்தம் செய்யவும்.

நெய்

உணவருந்துபவர்களுக்கு உப்பு மற்றும் நெய்யை கையால் வழங்கக்கூடாது, அதற்கு ஒரு ஸ்பூன் வைத்திருக்க வேண்டும். கையால் பரிமாறப்படும் உப்பும் நெய்யும் பசுவின் இறைச்சிக்கு சமம் என்கிறது சாஸ்திரம்.

இலை

வெற்றிலை மற்றும் வாழை இலைகள் காய்ந்த பின் வீட்டில் வைக்கக்கூடாது.

துர்நாற்றம்

உங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்து துர்நாற்றத்தை விலக்கி வைக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்