தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Thiruvonam: வருமானத்துக்கு ஏற்ப செலவு! திருவோணம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

Guru Peyarchi 2024 Thiruvonam: வருமானத்துக்கு ஏற்ப செலவு! திருவோணம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 08, 2024 11:30 PM IST

திருவோணம் நட்சத்திரம் நான்கு பாதங்களும் மகரம் ராசியில் இடம்பிடித்துள்ளது. குரு பெயர்ச்சி 2024இல் உத்திராடம் நட்சத்தினர் பெறும் பலன்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

திருவோணம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்
திருவோணம் நட்சத்தினர் குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சியால் திருவோணம் நட்சத்தினருக்கான பொதுப்பலன்கள்

திருவோணம் நட்சத்தினர் சந்திரன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். மகிழ்ச்சி கொடுக்கும் காலமாக இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு அமைந்துள்ளது. வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். கடன் பிரச்னை இருப்பவர்களுக்கு குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளது. போதிய அளவில் பணம் இருக்கும். பொருளாதாரத்தில் பிரச்னை இருக்காது. வருமானத்துக்கு ஏற்பட செலவுகளும் இருக்கும். புதிய முயற்சியில் ஈடுபடுவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும்.

யாரையும் நம்பி பணம் கொடுக்க வேண்டும். உங்களால் மற்றவர்கள் நன்மை பெறுவார்கள். லாபம் அடைவார்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது. நண்பர்கள், உடன் பிறப்புகளால் நன்மைகள் கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். திருமணாவர்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

உடலில் இருந்த நோய் பாதிப்பில் இருந்து மெல்ல குணமடைவீர்கள். இந்த பெயர்ச்சியில் செய்யும் வேலையில் முழு கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளுக்கு சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

தசாபுத்தி பலன்கள்

ராகு திசையில் இருப்பவர்கள் (30 வயது வரை) மாணவர்களுக்கு படிப்பில் எந்த தடையும் இருக்காது. படிப்பு சார்ந்து சாதகமான விஷயங்கள் அமையும். வெளிநாடு வேலை வாய்ப்புகளை கொடுக்கும். திருமண வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்படும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன்கள் அமையலாம். தொழில் சார்ந்த வளர்ச்சிகள் உண்டு.

குரு திசையில் இருப்பவர்கள் (46 வயது வரை) நிம்மதியை பெறுவீர்கள். சுப விரயங்கள் ஏற்படும். செலவுக்கு ஏற்ப வருமானமும் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியை பெறுவீர்கள். குருவின் நகர்வுகள் சாதகமாக இருப்பதால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்

சனி திசையில் உள்ளவர்கள் (65 வயது வரை) கடன் பிரச்னை குறையும். மன அழுத்தங்கள் குறைந்து நிம்மதியை பெறுவீர்கள். உடல் ரீதியான இருந்து பிரச்னைகள் குறையும். ஆனாலும் ஆரோக்கியத்தில் கவனமுடனே இருக்க வேண்டும். குலதெய்வத்தின் ஆசி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னை நீங்கும். 

புதன் திசையில் இருப்பவர்கள் (82 வயது வரை) பிள்ளைகளின் வளர்ச்சியை கண்கூடாக கண்டு மகிழ்வீர்கள். தடை, தாமதங்கள் ஏற்பட்டாலும் மெல்ல அகலும். சுயதொழில் பாதிப்புகள் விலகும். துன்பங்கள் விலகும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்