தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Guru Peyarchi 2024 Revathi: கையில் பணப்புழக்கம் இருக்கும், எடுத்த காரியங்களில் வெற்றி! ரேவதி நட்சத்திரம் குரு பெயர்ச்சி

Guru Peyarchi 2024 Revathi: கையில் பணப்புழக்கம் இருக்கும், எடுத்த காரியங்களில் வெற்றி! ரேவதி நட்சத்திரம் குரு பெயர்ச்சி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 19, 2024 09:30 PM IST

Guru Peyarchi 2024 Revathi: ரேவதி நட்சத்திரம் நான்கு பாதங்களும் மீனம் ராசியில் இடம்பிடித்துள்ளது. இந்த குரு பெயர்ச்சியில் எதிரிகளை வீழ்த்தி, எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கையில் பணப்புழக்கம் இருக்கும் என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

கையில் பணப்புழக்கம் இருக்கும், ரேவதி நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள்
கையில் பணப்புழக்கம் இருக்கும், ரேவதி நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள்

குரு பெயர்ச்சியால் ரேவதி நட்சத்தினருக்கான பொதுப்பலன்கள்

ரேவதி நட்சத்தினர் புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். பொருளாதார நிலை சீராக இருக்கும். பணப்பழக்கம் இருக்கும். எடுக்கும் காரியங்களில் வெற்றியை பெறுவீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்களிடம் உதவியை பெறுவீர்கள்.

வீடு, இடம் மாறுவதற்கான சூழல் உருவாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னை நீங்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வருமானம்.

வேலையில் கவனமாக இருக்க வேண்டும். சொந்த தொழில் செய்ய விரும்புகிறவர்கள் செய்வதற்கு உகந்த காலமாக உள்ளது. படிப்புக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையலாம். வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களால் நன்மை பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். இதயம், நுரையிரல் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் உடநலத்தில் அக்கறை செலுத்துங்கள். எதிரிகளை வீழ்த்தும் விதமாக இந்த குரு பெயர்ச்சி இருக்கும்.

ரேவதி நட்சத்தினருக்கான தசாபுத்தி பலன்கள்

கேது திசையில் இருப்பவர்கள் (20 வயது வரை) குரு பார்வை மூலம் நல்ல பலன்களை பெறுவீர்கள். மாணவர்களுக்கு படிப்பின் மீது இருந்த மந்த நிலை மாறும். மனஅழுத்தத்தில் இருந்த விடுபடுவீர்கள். பாதியில் நின்ற படிப்பு மீண்டும் தொடர்வதற்கான சூழ்நிலை உருவாகும்

சுக்கிர திசையில் இருப்பவர்கள் (40 வயது வரை) வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் அமையும். ஊதிய உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு இருந்து வந்த தொல்லைகள் அகலும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியை பெறுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு வரன்கள் அமையும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அடிக்கடி செலவுகள் ஏற்படலாம். நண்பர்கள் ரீதியாக உதவி, ஆதாயம் பெறுவீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபமும், வளர்ச்சியும் உண்டு.

சூரிய திசையில் இருப்பவர்களுக்கு (46 வயது வரை) கடன் பிரச்னைகள் தீரும். மருத்துவ செலவுகள். முதலீடு செய்யும் முன் கவனமுடன் செயல்படவும்.

சந்திர திசையில் இருப்பவர்கள் (56 வயது வரை) யோகம் ஏற்படும் காலமாக உள்ளது. கூட்டு தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் அகலும். பொருளாதார வளர்ச்சி அடைவீர்கள். சொத்து சேர்க்கும் யோகம் உண்டு. பெண்களுக்கு வேலை ரீதியாக இருந்து வந்த அழுத்தங்கள் நீங்கும்

செவ்வாய் திசையில் இருப்பவர்கள் (64 வயது வரை) வீட்டுக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டு. பிள்ளைகளுக்கு வரன் அமையும். தடை, தாமதங்கள் அகலும்.

ராகு திசையில் இருப்பவர்கள் (82 வயது வரை) கடன் பிரச்னை தீரும். உடல் இருந்து வந்து நோய் நொடி பிரச்னைகள் நீங்கும். தடையாக இருந்த காரியங்கள் வேகமடையும். பல்வேறு மாற்றங்களையும், பொருளாதார வளர்ச்சியை பெறும் காலமாக இருக்கும்.

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்