Mithunam Rasi Palan: கடன் கொடுக்கலாமா கூடாதா? மாமனாரிடம் பேசும் போது கவனம்.. இல்லன்னா.. - மிதுன ராசிபலன் இங்கே!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mithunam Rasi Palan: கடன் கொடுக்கலாமா கூடாதா? மாமனாரிடம் பேசும் போது கவனம்.. இல்லன்னா.. - மிதுன ராசிபலன் இங்கே!

Mithunam Rasi Palan: கடன் கொடுக்கலாமா கூடாதா? மாமனாரிடம் பேசும் போது கவனம்.. இல்லன்னா.. - மிதுன ராசிபலன் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 19, 2024 09:43 AM IST

Mithunam Rasi Palan: காதல் விவகாரத்தில், தடுமாற்றத்தை எதிர்பார்க்க முடியும். உங்கள் முன்னாள் காதலர் அல்லது மனைவியின் பெற்றோருடன் பழகும் போது, கவனமாக இருங்கள். - மிதுன ராசிபலன் இங்கே!

Mithunam Rasi Palan: கடன் கொடுக்கலாமா கூடாதா? மாமனாரிடம் பேசும் போது கவனம் - மிதுன ராசிபலன் இங்கே!
Mithunam Rasi Palan: கடன் கொடுக்கலாமா கூடாதா? மாமனாரிடம் பேசும் போது கவனம் - மிதுன ராசிபலன் இங்கே!

காதல் ஜாதகம் இன்று

காதல் விவகாரத்தில், தடுமாற்றத்தை  எதிர்பார்க்க முடியும். உங்கள் முன்னாள் காதலர் அல்லது மனைவியின் பெற்றோருடன் பழகும் போது, கவனமாக இருங்கள். காரணம், உங்கள் பேச்சு சலசலப்புக்கு வழிவகுக்க வாய்ப்பு இருக்கிறது. இது முறிவுக்கு இட்டுச்செல்லும். 

உறவில், அதிக நேரம் செலவழிப்பதை உறுதிசெய்து, பார்ட்னரை உற்சாகத்தில் வைத்திருப்பதை உறுதி செய்யுங்கள். சில நீண்ட தூர காதல் விவகாரங்கள், இன்று எதிர்பார்த்த முடிவுகளை தராது. ஆகையால், நீங்கள் இருவரும் பேசியே நெருக்கடியை தீர்க்க வேண்டும்.

மிதுனம் தொழில் ஜாதகம் இன்று

புதிய பணிகள் உங்களை பணியிடத்தில் ஈடுபாட்டுடன் வைத்திருக்கும். உங்கள் வேலை பாணி நிர்வாகத்தை ஈர்க்கும், இன்று நீங்கள் உங்களது பொறுப்பில், மாற்றத்தை எதிர்பார்க்கலாம். அலுவலகத்தில் கூடுதல் மணிநேரம் செலவிட தயாராக இருங்கள். 

அதே நேரத்தில், உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் சேவையைக் கோரும் வேலையையும் செய்யலாம். இது, உங்கள் சுயவிவரத்திற்கு மதிப்பு சேர்க்கும். இன்று வேலை தொடர்பான நேர்காணலில் இருப்பவர்கள், முடிவைப் பற்றி நம்பிக்கையுடன் இருக்கலாம். சில வர்த்தகர்கள் உரிமம் தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், உடனடி நடவடிக்கை இந்த நெருக்கடியை தீர்க்கும்.

மிதுனம் பண ஜாதகம் இன்று

இன்று நீங்கள் மின்னணு சாதனங்களை வாங்குவதைக் கருத்தில் கொள்ளலாம். ஆனால், ஆடம்பர பொருட்களுக்கு அதிக அளவு செலவிட வேண்டாம். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் வாய்ப்பு இருக்கிறது. பெரிய தொகையை, கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கலாம். ஒரு நண்பர் அல்லது உடன்பிறப்பு சம்பந்தப்பட்டவர்களின் பணப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் இன்றைய நாள் வாய்ப்பாக இருக்கும். 

உடல்நலம் இன்று 

எந்த பெரிய உடல்நலப் பிரச்சினையும், இன்று வழக்கமான வாழ்க்கையை பாதிக்காது. இருப்பினும், வாழ்க்கை முறையில் சமரசம் செய்ய வேண்டாம். உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குங்கள். 

உங்கள் உணவிலும் கவனமாக இருங்கள். முதியவர்கள், மருந்துகளைத் தவறவிடக்கூடாது. சங்கடமாக உணரும்போது மருத்துவரை அணுக வேண்டும். அணுகுமுறையில் நேர்மறையாக இருங்கள். நேர்மறையான எண்ணங்களுடன் மனதை புத்துணர்ச்சியுடன் வைத்திருங்கள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்