தமிழ் செய்திகள்  /  Astrology  /  Methods Of Lighting Lamps On Karthigai Deepam Festival

Karthigai Deepam 2022: தீபத்திருநாளன்று விளக்கேற்றும் வழிமுறைகள்!

Suriyakumar Jayabalan HT Tamil
Dec 06, 2022 02:59 PM IST

கார்த்திகை தீபத்திருநாள் அன்று விளக்கேற்றும் முறைகள் குறித்து இங்கே காண்போம்.

கார்த்திகை தீபத்திருநாள்
கார்த்திகை தீபத்திருநாள்

ட்ரெண்டிங் செய்திகள்

விளக்கு ஏற்றும் முறைகள்

பித்தளை, வெள்ளி இது போன்ற விளக்குகளைக் கழுவி சுத்தமாகத் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்குகளைச் சுத்தமாகத் துடைத்து மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகிவிடும் பொட்டு வைக்க வேண்டும்.

குத்துவிளக்குகளை வாசனை உள்ள மலர்கள் கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு குத்து விளக்குகளின் அடிப் பக்கத்தில் பூ சூட்டும் பொழுது நமது பெற்றோருக்காகவும், மற்ற உறவுகளுக்காகவும் வேண்டிக் கொண்டு பூக்களைச் சூட வேண்டும்.

விளக்கின் நடுப்பகுதியில் பூச்சூட்டும் போது திருமணம் செய்து கொண்டவர்களின் வீட்டாரையும் குழந்தைகளையும் எண்ணி பிரார்த்தனை செய்து பூக்களைச் சூட வேண்டும்.

குத்துவிளக்கின் உச்சிப் பகுதியில் பூச்சூடும் பொழுது மகாலட்சுமியைப் பரிபூரணமாகப் பிரார்த்தனை செய்து அதனைச் சூட வேண்டும். இவ்வாறு வழிபாடு செய்யும் பட்சத்தில் இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பது அதிகமாகும்.

பொதுவாக விளக்குகளை வெறும் தரையில் வைக்கக் கூடாது. பித்தளை, வெள்ளி, செம்பு போன்ற உலகங்கள் கொண்ட தாம்பூலத்தின் மீது வைத்து விளக்கேற்ற வேண்டும். மரத்திலால் ஆன பொருட்களின் மீது விளக்கை வைக்கும் போது அடிப்பாகத்தில் இது போன்ற உலோகப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

குத்துவிளக்கு பகுதிகளில் மொத்தமாக எட்டு இடங்களில் பொட்டு வைக்க வேண்டும். அதற்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்ற பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு வைக்க வேண்டும்.

இவ்வாறு குத்து விளக்கில் வைக்கப்படும் எட்டு பொட்டுக்களும் இறைவனின் உருவத்தை அலங்கரிப்பதாக ஆன்மீகம் கூறுகிறது. அவ்வாறு செய்யும் பட்சத்தில் இறைவனின் பூரண அருள் கிடைக்கும் என்பதை அதிகமாகும்.

WhatsApp channel