Love and Relationship Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை’ ஒத்துழைப்பு தரும் வாழ்கை துணை யோகம் யாருக்கு?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Love And Relationship Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை’ ஒத்துழைப்பு தரும் வாழ்கை துணை யோகம் யாருக்கு?

Love and Relationship Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை’ ஒத்துழைப்பு தரும் வாழ்கை துணை யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Published Jul 26, 2024 05:30 AM IST

Love and Relationship Horoscope: ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் எந்த விதத்திலும் பங்கப்படாமல் இருந்தாலே அவருக்கு ஒத்துழைக்க கூடிய வாழ்கை துணை கிடைக்கும்.

Love and Relationship Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை’ ஒத்துழைப்பு தரும் வாழ்கை துணை யோகம் யாருக்கு?
Love and Relationship Horoscope: ’மேஷம் முதல் மீனம் வரை’ ஒத்துழைப்பு தரும் வாழ்கை துணை யோகம் யாருக்கு?

இது போன்ற போட்டோக்கள்

திருமணம் குறித்த ஜோதிட கணிப்புகள் 

எந்த ஒரு சூழலிலும் ஒருவருக்கு ஒருவர் அதிக ஒத்துழைப்பு தந்து வாழ்கையை நகர்த்தி செல்வார்களா என்பதை கணிக்க வேண்டியது அவசியம். லக்னாதிபதி நண்பர் ஆக இருக்க வேண்டியது, ராசி அதிபதி நண்பர் ஆக இருக்க வேண்டியது. தசா நாதர்கள் கடும் பகைவர்களாக இல்லாமல் இருக்க வேண்டியது. இரண்டு மற்றும் ஏழாம் இடம் சரியாக இருக்க வேண்டியது. 7ஆம் அதிபதி, 2ஆம் அதிபதியின் நிலையை பார்ப்பது உள்ளிட்டவைகள் இதற்கு அடிப்படையாக உள்ளன. 

சுக்கிரனின் நிலையும், திருமண வாழ்கையும்

ஒரு ஆணின் ஜாதகத்தில் சுக்கிரன் எந்த விதத்திலும் பங்கப்படாமல் இருந்தாலே அவருக்கு ஒத்துழைக்க கூடிய வாழ்கை துணை கிடைக்கும். இதுவே 40 சதவீத வேலைகளை செய்துவிடும். 2 மற்றும் 7ஆம் அதிபதிகள் கடுமையான பாவக் கோள்கள் உடன் சேராமல் இருந்தால் நல்ல ஒத்துழைப்பு தரக்கூடிய வாழ்கை துணை அமையும். 

பெண் ஜாதமும் செவ்வாய் பகவானும் 

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் பங்கப்படாமல் இருந்தாலே நல்ல ஒத்துழைப்பு தரக்கூடிய கணவர் அமைவார். இவர்களுக்கு 2, 7, 8ஆம் இடம் கடுமையான பாவிகளால் பார்க்கபடாமல் இருப்பது சிறப்பை தரும். 

உங்கள் லக்னாதிபதி 7ஆம் அதிபதிக்கு அருகில் இருக்கும் அமைப்பு இருந்தால் உங்களுக்கு நல்ல புரிந்துணர்வு கொண்ட வாழ்கை துணை அமையும். 

நல்ல ஒத்துழைப்பு தரும் வாழ்கை துணை 

உதாரணமாக விருச்சிகம் லக்னத்தை எடுத்துக் கொள்வோம். 7ஆம் அதிபதியாக சுக்கிரன் உள்ளார். செவ்வாயும், சுக்கிரனும் அதிக வீடுகளை கடக்காமல் அருகருகே இருந்தால் நல்ல ஒத்துழைப்பு தரும் வாழ்கை துணை அமைய போகின்றது என்று அர்த்தம் ஆகும். 

திரிகோண நிலையும், திருமண வாழ்கையும் 

மேலும், லக்னாதிபதியும், 7ஆம் அதிபதியும் திரிகோண நிலையில் இருந்தல நல்ல ஒத்துழைப்பு தரும் வாழ்கை துணை அமையும். 

உதாரணமாக, தனுசு லக்ன ஜாதகத்தை எடுத்து கொள்வோம். இந்த லக்னத்திற்கு அதிபதி குரு. இவர் கும்ப ராசியில் உள்ளார். இவருக்கு 7ஆம் அதிபதியான புதன் துலாம் ராசியில் உள்ளார் என வைத்து கொள்வோம். குருவின் பார்வையை 7ஆம் அதிபதியும், 7ஆம் இடமும் வாங்குகின்றது. குரு அமர்ந்த வீட்டுக்கு திரிகோணத்தில் 7ஆம் அதிபதி புதன் அமர்ந்து உள்ளார். 

இந்த அமைப்பு மூலம் ஒருவருக்கு, ஒருவர் துணையாக இருக்கும் நிலை உண்டாகும். கணவனும், மனைவியும் இணைந்தே பயணிக்கும் நன்மைகள் ஏற்படும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

 

 

Whats_app_banner