April Month Horoscope: கூட்டு கிரக சேர்க்கை..யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?..யோகம் பெரும் இந்த 5 ராசிகள்!
Monthly Horoscope: மேஷம், கடகம் உள்ளிட்ட சில ராசியினருக்கு ஏப்ரல் மாதத்தில் வேலை, தொழில், வருமானம், உடல்நலம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம், கடகம், கன்னி உள்ளிட்ட சில ராசியினருக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே உங்களுக்கு இம்மாதம் நேர்மறையான எண்ணங்கள் மேம்படும். மேஷத்தில் ஏப்ரல் 14 அன்று சூரியன் உச்சம் அடைகிறார். இதனால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. குருவால் பணவரத்து அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். ஆதாயமான பலன்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். சுபச் செலவுகள் ஏற்படும்.
ரிஷபம்
சுக்கிரன், புதன் சேரும் மாதம். இதனால் குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சி நடக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி உண்டு. நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். மாணவர்களுக்கு சிறப்பான மாதமாக இம்மாதம் அமையும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கடகம்
கடக ராசியில் ஏப்ரல் மாதத்தில் சூரியன் உச்சம் அடையும். இம்மாதம் வேலை விஷயத்தில் போராட்டம் இருந்தாலும் சாதகமாகத்தான் அமையும். தொழில், வியாபாரம் தொடர்பான செயல்களில் சாதகமான பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். சிலருக்கு வீண் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாகனம் பயன்பாட்டில் கவனம் தேவை. செயல்களில் இருந்து வந்த தடைகள் விலகும்.
கன்னி
கன்னி ராசியினரே உங்களுக்கு இந்த மாதம் எதிர்பார்த்த விஷயங்கள் சாதகமாக அமையும். முக்கிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பண வரவு உண்டு. மாணவர்களுக்கு போட்டி தேர்வுகள் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். கணவன், மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு பதவிகள் தேடி வரும் வாய்ப்பு உண்டு.
கும்பம்
கும்ப ராசியினருக்கு இம்மாதம் வியாபாரம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். ஆனால், வருமானத்திற்கு குறைவு இருக்காது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்