Budhathiya RajaYoga: ரிஷப ராசியில் ஜோடிபோடும் புதனும் சூரியனும்.. பணத்தை செழும்பாக சம்பாதிக்கப்போகும் ராசிகள்
Budhathiya RajaYoga: புதன் பகவானும் சூரிய பகவானும் ரிஷப ராசியில் சேர்வதால், புதாத்திய ராஜயோகம் உண்டாகி சில ராசியினருக்கு நற்பலன்கள் கிடைக்கின்றன. அவை குறித்துப் பார்ப்போம்.
Budhathiya RajaYoga: நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு நகர்கின்றன. இதனை ஜோதிடத்தில் ‘கிரகப்பெயர்ச்சி’ என்பர்.
கிரகங்களின் பெயர்ச்சியைத் தாண்டி, அவை பின்னால் பெயர்வது, ராசியில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அது சார்ந்த விளைவுகள் நல்ல மற்றும் கெட்ட விளைவுகளை உண்டாக்கும்.
மே 2024-ல் கிரகப் பெயர்ச்சிகள் மற்றும் இணைவுகள் காரணமாக, மக்களின் வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகளை சரிசெய்ய சாதகமான காலமாக இருக்கும்.
நமக்கு ஆற்றலை வழங்கக்கூடிய சூரியன், மே 14, 2024 அன்று, மாலை 05:41 மணிக்கு ரிஷப ராசிக்கு மாறுகிறார். அதன் பிறகு, சரியான புத்தியைத் தரக்கூடிய புதன் கிரகம் மே 31ஆம் தேதியன்று, மதியம் 12:02 மணிக்கு ரிஷப ராசிக்குள் நுழைகிறது.
இப்படி ரிஷப ராசியில் சூரியனும் புதன்பகவானும் சேர்வதால் புதாத்திய யோகம் உண்டாகிறது. இந்த புதாத்திய யோகம் சில ராசியினருக்கு அபரிமிதமான வளர்ச்சியைத் தருகிறது. அப்படி, அபரிமிதமான வளர்ச்சியைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
புதாதித்ய ராஜயோகம் என்றால் என்ன?
நவகிரகங்களில் ராஜாவாக கருதப்படுபவர், சூரிய பகவான். இவர் தன்னம்பிக்கை, ஆற்றல், சகிப்புத்தன்மை ஆகியவற்றின் ஆதாரமாக இருக்கிறார். அதேபோல், நல்ல புத்தி, நன்கு பேசும் திறன், படிப்பு ஆகியவற்றின் ஆதாரமாகத் திகழ்கிறார், புதன் பகவான்.
இத்தகைய குணங்களைக் கொண்ட புதனும் சூரியனும் இணைந்து உருவாக்கும் யோகம், புதாத்திய ராஜயோகம் எனப்படுகிறது. இதில், சூரியனை - ஆதித்யா என்றும் குறிப்பிடுவர். இந்தப் புதாத்திய ராஜயோகத்தைப் பெறும் ராசிகளுக்கு மக்களிடையே செல்வாக்கு, பொதுவெளியில் மரியாதை, நிதி ஆகியவை செழிக்கும்.
புதாத்திய ராஜயோகத்தால் நற்பலன்களை அதிகம் பெறும் ராசிகள் குறித்து வாருங்கள் பார்க்கலாம்.
ரிஷபம்:
ரிஷப ராசியில் சூரிய பகவானும் புதன் பகவானும் சேர்ந்து இருப்பது, நற்பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில் மிகுந்த மனக்குழப்பத்துடன் இருப்பவர்களின் மனதில் நிம்மதி இருக்கும். திருப்தி பிறக்கும். சொந்த ஊரில் வசிக்கும் ரிஷப ராசியினருக்கு, இக்காலத்தில் மதிப்பு மரியாதை கூடும்.
உங்கள் அலுவலகங்களில், அலுவலக அரசியலால் பிரச்னைகளைத் தொடர்ந்து அனுபவிப்பவர்களுக்கு இக்காலகட்டத்தில் சாதகமான விளைவுகள் வந்துசேரும். திருமணம் கைகூடாத ரிஷப ராசியினருக்கு, இக்காலத்தில் வரன் கைகூடும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பாசம் கூடும். தொழில் முனைவோர்களுக்கு புதாத்திய ராஜயோகத்தால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.
கடகம்:
கடக ராசியில் சூரிய பகவானும் புதன் பகவானும் சேர்ந்து இருப்பது, சுப பலன்களையே தரும். இது கடக ராசியின் ஒன்பதாம் இல்லத்தில் நடந்துள்ளது. இக்காலகட்டத்தில் இறைநம்பிக்கை மற்றும் இறைத்தொண்டுகளை அதிகம் செய்வீர்கள். கடக ராசியினருக்கு வருவாய் முன்பிருந்ததைவிட சற்று அதிகரிக்கும். மேலும் கடக ராசியினருக்கு இருந்த உளச்சோர்வு மற்றும் மனச்சோர்வு ஆகியவை நீங்கும்.
வெளிநாடு செல்வதற்கு முயன்றால் இக்காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் அமையும். தொழிலை விரிவுசெய்ய நாடு முழுவதும் பயணம் செய்வீர்கள். மிகுந்த சிரத்தையுடன் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் இந்தக் காலகட்டத்தில் தேர்வில் தேர்ச்சி பெற்று வெல்வார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு, புதாத்திய ராஜயோகத்தால், எக்கச்சக்கமான பலன்களை அறுவடை செய்வர். இந்த புதாத்திய ராஜயோகத்தால் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபமான காலகட்டமாகும். வணிகர்களுக்கு வருவாய் பெருகும். அதிக லாபம் கிடைக்கும். அதேசமயம், பணியில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அரசு வேலைக்கு முயற்சிக்கும் சிம்ம ராசியினருக்கு நல்ல வாய்ப்புகள் இக்கட்டத்தில் உருவாகும்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்
டாபிக்ஸ்