தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Marutha Yogam: ‘மேஷம் முதல் மீனம் வரை!’ கோழையை வீரன் ஆக்கும் மாருத யோகம் யாருக்கு?

Marutha yogam: ‘மேஷம் முதல் மீனம் வரை!’ கோழையை வீரன் ஆக்கும் மாருத யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil
Feb 05, 2024 08:43 AM IST

”Marutha Yogam: இந்த யோகம் கொண்டவர்கள் பெரும் வெற்றியாளர்களாக விளங்குவர்”

சூரிய பகவான்
சூரிய பகவான்

யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம் ஆகிய யோகங்களுக்கு மத்தியில் ’மாருத யோகம்’ முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சூரியனை மையமாக கொண்டு வரும் யோகங்களில் மாருத யோகமும் ஒன்று என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

சூரியனுக்கு கேந்திர ஸ்தானங்களில் சந்திரன் அமைந்துள்ள நிலையில், சந்திரன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று கிரங்களும் திரிகோண அமைப்பில் இருந்தால் அது மாருத யோகம் ஏற்படுகிறது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

மாருத யோகம் கொண்டவர்கள் மிகுந்த தைரியம் கொண்டவர்களாக விளங்குவர் என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகிறது. 

இந்த யோகம் உள்ளவர்கள் பல துறைகளில் புலமை கொண்டவர்களாய் விளங்கி பொருளாதார பலம் கொண்டவர்களாய் விளங்குவர். 

இவர்களுக்கு நுட்பமான அறிவும், வணிக திறனும் இவர்களின் தொழில் வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும். இந்த யோகம் கொண்டவர்கள் பெரும் வெற்றியாளர்களாக விளங்குவர்.

இந்த யோகம் கொண்டவர்களுக்கான பலன்கள் ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் அமைப்பையும் பொறுத்து மாறுபடும். யோகத்தின் முழு பலனையும் பெற ஜாதகர் நல்ல கர்மங்களை செய்ய வேண்டும். யோகத்தின் பலன்கள் ஜாதகரின் ராசி மற்றும் பிறப்பு நேரத்தை பொறுத்து சிறிது மாறுபடலாம்.

மாருத யோகம் கொண்டவர்கள் சமூகத்தில் மதிக்கப்படுவார்கள். இந்த யோகம் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிவார்கள்.  பல துறைகளில் புலமை மற்றும் ஞானம், சிறந்த கல்வி மற்றும் அறிவு, திறமை வாய்ந்த பேச்சாளர்களாக இவர்கள் விளங்குவர். கலை, இசை மற்றும் இலக்கியத்தில் இவர்களுக்கு ஆர்வம் இருக்கும், இதன் மூலம் செல்வாக்கு மற்றும் புகழ் உள்ளிட்டவை கிடைக்கும்.