தமிழ் செய்திகள்  /  Astrology  /  Mars Transit Will Be Favorable For The Four Zodiac Signs

பிப்ரவரி 5 ஆம் தேதிக்கு மேல் இந்த ராசிக்காரர்கள் ஓஹோனு இருக்க போறங்க.. செவ்வாய் சஞ்சாரத்தால் நிகழும் அதிர்ஷடம்!

Divya Sekar HT Tamil
Jan 29, 2024 07:44 AM IST

செவ்வாய் சஞ்சாரம் நான்கு ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். அவை எந்த ராசிக்காரர்கள், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்க போகிறது என்பது குறித்து பார்க்கலாம்.

செவ்வாய் பகவான்
செவ்வாய் பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். இவர் செல்வம், செழிப்பு, துணிவு, வீரம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளின் தலைவனாக திகழ்ந்து வருகிறார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சூரிய பகவான் மகர ராசியில் பயணம் செய்து வருகிறார். அதே சமயம் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் மகர ராசியின் உள்ளே நுழைகிறார். சூரியன் மற்றும் செவ்வாய் இணைப்பானது ஆதித்ய மங்கள யோகத்தை உருவாக்க உள்ளது.

செவ்வாய் பகவான் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அது மட்டுமல்லாது செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் உதயமானார். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே ராசியில் இதே நிலையில் பயணம் செய்ய உள்ளார்.

பிப்ரவரி 5ஆம் தேதி செவ்வாய் மகர ராசிக்கு மாறும். இந்த மாற்றத்தால் சில ராசிக்காரர்கள் பெரிதும் பலன் அடைவார்கள். இந்த அதிர்ஷ்ட ராசிகளை தெரிந்து கொள்ளலாம். தனுசு ராசியில் உள்ள செவ்வாய் பிப்ரவரி 5 திங்கட்கிழமை இரவு 9:56 மணிக்கு மகர ராசிக்கு மாறுகிறார். இந்த செவ்வாய் சஞ்சாரம் நான்கு ராசிக்காரர்களுக்கும் சாதகமாக அமையும். இவை என்னவென்று பாருங்கள்.

ரிஷபம்

 மகர ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் வணிகத்தை விரிவுபடுத்தும்போது, ​​உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சம்பள உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கும்.

துலாம்

மகர ராசியில் செவ்வாய் சஞ்சாரம் என்றால் வேலையில் எளிமை, பணிகள் எளிதாக இருக்கும். சந்ததியினருக்கு சுப யோகங்கள் உண்டு. தொழில் மற்றும் பணியிடத்தில் நல்ல அங்கீகாரம் உருவாகும்.

விருச்சிகம்

செவ்வாய் சஞ்சாரம் விருச்சிக ராசியினருக்கு வருமானம் தரும். திருமண வாழ்வில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வாழ்க்கையில் சுகபோகங்களுக்கு பஞ்சம் இருக்காது. வேலை தேடிக்கொண்டிருந்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும். புதிய பண வரவு கிடைக்கும்.

கும்பம் 

 செல்வம் பெருக புதிய வழிகள் காணப்படும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். அனைத்து பணிகளும் பிரச்சனையின்றி முடிவடையும். சுகபோகங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்