தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mars Transit: நகர்ந்து வரும் செவ்வாய்.. 15 நாளில் இந்த ராசியினருக்கு அடிக்க போகும் யோகம்!

Mars Transit: நகர்ந்து வரும் செவ்வாய்.. 15 நாளில் இந்த ராசியினருக்கு அடிக்க போகும் யோகம்!

Aarthi Balaji HT Tamil
May 20, 2024 12:08 PM IST

Mars Transit: செவ்வாய் தைரியம், வீரம் மற்றும் துணிச்சலுக்கு அதிபதியாக கருதப்படுகிறார். செவ்வாய் கிரகத்தின் தாக்கம் ஒவ்வொரு ராசியிலும் உள்ளது. ஜூன் 1 ஆம் தேதி மேஷ ராசியில் நுழையும் செவ்வாய் 3 ராசிகளின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்.

நகர்ந்து வரும் செவ்வாய்.. 15 நாளில் இந்த ராசியினருக்கு அடிக்க போகும் யோகம்!
நகர்ந்து வரும் செவ்வாய்.. 15 நாளில் இந்த ராசியினருக்கு அடிக்க போகும் யோகம்!

செவ்வாய் கிரகத்தின் தாக்கம் ஒவ்வொரு ராசியிலும் உள்ளது. ஜூன் 1 ஆம் தேதி மேஷ ராசியில் நுழையும் செவ்வாய் 3 ராசிகளின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும். இந்த கிரக மாற்றத்தால் சில ராசிகள் பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள். 

மேலும் பதவி உயர்வு மற்றும் வேலை உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இப்போது எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் பலன் அடைவார்கள் என பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் கிரக மாற்றத்தால் சிறப்பான பலன்களை பெறலாம். தொழில் துறையை பற்றி பார்த்தால் செவ்வாய், நன்றாக முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்க உதவி செய்வார். இதனுடன் வியாபாரத்திலும் அதிக லாபம் பெறலாம். நிதி நிலைமை எதிர்பார்த்த இடத்தில் இருந்து கிடைக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும் என்பதால் கவலை வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தின் மாற்றத்தால் பலன்களைப் பெற முடியும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணத்தைப் பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்பின் பலனை உங்கள் தொழிலிலும் பெறுவீர்கள். இதனுடன் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வுடன் நல்ல சம்பள உயர்வு கிடைக்கும். பதவி, கௌரவம் கூடும். வியாபாரத்திலும் பல நன்மைகள் உண்டாகும். பண விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் செவ்வாய் மாற்றத்தால் பெரிதும் நன்மை அடைவார்கள். உங்கள் முயற்சிகள் இப்போது பலனளிக்கும். இதனுடன் உங்கள் தொழிலில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். புதிய வேலைக்கான தேடல் நல்ல பதில் கிடைக்க வைக்கும். இதனுடன், சக ஊழியர்கள் மற்றும் மூத்தவர்களின் உதவியுடன் உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறலாம். வியாபாரத்திலும் லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஒரு பெரிய திட்டம், ஒப்பந்தம் அல்லது ஆர்டரைப் பெறலாம். இது உங்களுக்கு நிறைய லாபம் தரும். நிதி நிலையும் நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையிலும் மகிழ்ச்சி இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்