Mars Transit 2025: உஷாரய்யா உஷாரு.. நகர்கிறார் செவ்வாய் பகவான்..எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்!
Mars Transit 2025: செவ்வாய் கடக ராசியில் பிரவேசிக்கிறார். ஜூன் 7 வரை கடக ராசியிலேயே இருப்பார். செவ்வாயின் கடக ராசி பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

Mars Transit 2025: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களின் தலைவன் செவ்வாய். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு அவர் செல்ல 45 நாட்கள் ஆகும். செவ்வாய்தான் துணிவு, வீரம், விடாமுயற்சி, வலிமை போன்றவற்றுக்கு அடிப்படையானவர். அவரது பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Apr 30, 2025 10:54 PMமேஷ ராசியில் புதன் - சூரியன் இணைவு.. உருவாகும் புதாத்திய ராஜயோகம்! செல்வாக்கு, பொருள் சேர்க்கை பெறும் ராசிகள்
Apr 30, 2025 05:33 PMபாக்கியங்களை அள்ளிக் கொட்ட வரும் குரு.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசிகள்.. பணக்கார யோகம் யாருக்கு?
Apr 30, 2025 01:58 PMகங்கா சப்தமி நாளில் உருவாகும் திரிபுஷ்கர, ரவி யோகம்.. வருமானம், நிதி நிலை மேம்பாடு பெறப்போகும் 5 ராசிகள் இதோ
Apr 30, 2025 10:15 AMகோடிகளில் நனைய போகும் ராசிகள்.. செல்வத்தால் நிரப்பப்போகும் குரு.. வந்துவிட்டது யோகம்!
Apr 30, 2025 07:30 AMகூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
Apr 30, 2025 05:00 AMஅட்சய திருதியையில் அதிர்ஷ்டம் யாருக்கு.. இன்று ஏப்.30, 2025 உங்களுக்கு சாதகமா.. பாதகமா.. ஜாக்பாட் யாருக்கு பாருங்க!
செவ்வாய் கடக ராசியில் பிரவேசிக்கிறார். ஜூன் 7 வரை கடக ராசியிலேயே இருப்பார். செவ்வாயின் கடக ராசி பெயர்ச்சி 12 ராசிகளையும் பாதிக்கும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதன் காரணமாக சில ராசிகள் பாதிப்பையும் எதிர்கொள்ளும். அந்த ராசிகள் யாவை என்பதை இங்கே பார்ப்போம்.
1.மேஷ ராசி
மேஷ ராசி வாசிகளுக்கு செவ்வாயின் ராசி பெயர்ச்சி பல சவால்களை கொண்டுவரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.
வேலை வாழ்க்கை சற்று மந்தமாக இருக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகள் இருக்கும். தம்பதியர் வாழ்வில் சண்டைகள், கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
2.கடக ராசி
செவ்வாயின் பெயர்ச்சி உங்களுக்கு சில எதிர்மறை நிகழ்வுகளை கொண்டுவரும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். சாலை விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தம்பதியர் வாழ்க்கை சில சிரமங்களுடன் இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வேலை மற்றும் வியாபாரம் மந்தமாக இருக்கலாம்.
3.சிம்ம ராசி
செவ்வாயின் பெயர்ச்சி உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை கொண்டுவரலாம். நிலம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விஷயங்களை ஆராய்ந்து பார்க்காமல் கையெழுத்திடுவதை தவிர்க்க வேண்டும்.
மற்றவர்களுக்கு உத்தரவாதம் அளிக்காமல் இருப்பது நல்லது. வாழ்க்கையில் பல விரும்பத்தகாத விஷயங்களை பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். தம்பதியர் வாழ்க்கை மந்தமாக இருக்கலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்கள், ஆலோசனைகள் முழுமையாக உண்மையானவை, துல்லியமானவை என்று நாங்கள் கூற முடியாது. நிபுணர்களின் ஆலோசனைகளின்படிதான் இந்த தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன்பு, தொடர்புடைய துறையில் உள்ள நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது நல்லது.

டாபிக்ஸ்