Mars Transit: மிதுனத்தில் பிற்போக்காகப் பெயரும் செவ்வாய்.. வேலை மற்றும் வணிகத்தில் டாப்பாக வரும் ராசிகள்
Mars Transit: மிதுனத்தில் பிற்போக்காகப் பெயரும் செவ்வாய்.. வேலை மற்றும் வணிகத்தில் டாப்பாக வரும் ராசிகள் குறித்துக் காண்போம்.

Chevvai Transit: ஜோதிட கணக்கீடுகளின்படி, இந்த நேரத்தில் செவ்வாய் பிற்போக்கு திசையில் விரைவில் மிதுன ராசியில் நுழைவார். இது இந்த ஆண்டு செவ்வாய் கிரகத்தின் முதல் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. பிற்போக்கு நிலையில் செவ்வாயின் பலன்கள் மாறுபட்டது. வழக்கமாக, கிரகங்களின் பிற்போக்கு இயக்கம் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. ஆனால், வரும் ஜனவரி 21ஆம் தேதி செவ்வாயின் இந்தப் பெயர்ச்சி, மூன்று ராசியினருக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் இந்தப் பெயர்ச்சியால், இந்த ராசிக்காரர்களின் தலைவிதி உயரத் தொடங்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
ஜோதிடத்தின்படி, செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி பின்னோக்கி சென்றது. மேலும் வரக்கூடிய ஜனவரி 21ஆம் தேதி மிதுன ராசியில் நுழைகிறார். இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். அப்படி நன்மையைப் பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
பிற்போக்கு திசையில் நுழையும் செவ்வாய்யால் நன்மை பெறும் ராசிகள்:
ரிஷபம்: மிதுனத்தில் செவ்வாய் பிற்போக்கு ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த ராசிக்காரர்கள் செல்வத்தின் வீட்டில் செவ்வாய் பெயர்ச்சியைக் கொண்டிருப்பார்கள், இது நிதி நிலையைப் பலப்படுத்தும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணம் பல மூலங்களிலிருந்து வரும், இது உங்கள் நிதி நிலைமையை உறுதிப்படுத்தி வளப்படுத்தும். மேலும், வாழ்வில் நல்லெண்ணங்களைத் தரும்.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அதிர்ஷ்ட வீடான ஒன்பதாம் வீட்டில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை முழுமையாக ஆதரிக்கும். இதன் காரணமாக நிலுவையில் உள்ள பணிகளும் முடிக்கப்படும். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நேர்மறையான முடிவுகள் காணப்படும். கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வலிமையும் தைரியமும் கிடைக்கும். கோபத்தில் கட்டுப்பாடு இருக்கும். வாழ்வில் சிறப்பு அதிகரிக்கும். குழந்தையில்லாமல் இருந்தவர்களுக்கு குழந்தைப் பேறு கிட்டும். வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வீர்கள்.
கும்பம்:
செவ்வாயின் இந்த பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். காதல் வாழ்க்கையின் அனைத்துப் பிரச்னைகளும் முடிவுக்கு வந்து உறவு வலுவடையும். துணையுடனான உறவு இனிமையாகவும் புரிதலுடனும் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருந்தால், வாழ்க்கையின் மற்ற பகுதிகளிலும் நேர்மறையான மாற்றங்கள் காணப்படும். வியாபாரம் தொடர்பான முக்கிய வேலைகள் நிறைவேறும். வாழ்வு செழிக்கும். எதிரிகள் தொல்லை மறையும்.
செவ்வாய் பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் ஸ்ரீஹனுமாரை வழிபடவும். சிவப்பு ஆடைகள், பருப்பு அல்லது வெல்லம் தானம் செய்யுங்கள். ஓம் பௌமாய நமஹ என்ற மங்கள மந்திரத்தை உச்சரிக்கவும். காரமான உணவுகள் மற்றும் கந்தல் ஆடைகளைத் தவிர்க்கவும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்கள்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்திரவாதமும் இல்லை. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ஜோதிடர்கள்/பஞ்சாங்கங்கள்/சொற்பொழிவுகள்/நம்பிக்கைகள் வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக் கொள்வது பயனர்களின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்