தமிழ் செய்திகள்  /  Astrology  /  Mandaikadu Bhagavathi Amman Temple Festival Barani-kodai-vizha

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று பரணி கொடைவிழா!

Divya Sekar HT Tamil
Mar 25, 2023 07:28 AM IST

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று பரணி கொடைவிழா நடக்கிறது.

மண்டக்காடு பகவதி அம்மன் கோயில்
மண்டக்காடு பகவதி அம்மன் கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த கோயிலில் மாசி பெருந்திருவிழா கடந்த 5ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து கணபதி ஹோமம், உஷா பூஜை, அத்தால பூஜை, வலியை படுக்கை பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், சந்தனகுடம் ஊர்வலம், பால்குடம் ஊர்வலம், பெரிய சக்கர தீ வெட்டி ஊர்வலம் ஆகியவை முதல் ஒன்பது நாள்களில் நடைபெற்றது.

திருவிழாவின் 9ஆம் நாள் இரவில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய சக்கர தீ வெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்வை காண பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

இதன் பின்னர் விழாவின் 10வது மற்றும் இறுதி நாளில் ஒடுக்கு பூஜை திராளமான பக்தர்கள் பங்கேற்க கோலகலமாக நடைபெற்று முடிந்தது.

இதை தொடர்ந்து 8ஆம் கொடை விழா கடந்த 21ஆம் தேதி நடந்தது. இந்நிலையில் இன்று (மார்ச் 25) அம்மனின் பிறந்த நாளாக பக்தர்களால் கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று பரணி கொடைவிழா நடக்கிறது.

இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோயில் திருநடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், உஷபூஜை, உருள் நேர்ச்சை, பூமாலை நேர்ச்சை, உச்சிகால பூஜை, குத்தியோட்டம், தொடர்ந்து மாலையில் தங்கரதம் உலாவருதல், திருவிளக்கு பூஜை, அலங்கார தீபாராதனை, அத்தாழபூஜை, வெள்ளிப்பல்லக்கில் அம்மன் பவனி நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.

இந்த பூஜை மாசிக்கொடை விழாவின் ஆறாம் நாள், பங்குனி மாத பரணி நட்சத்திரத்தன்று நடக்கும் பரணிக்கொடை விழாவன்று மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமை என வருடத்தில் 3 தடவை நடக்கிறது.

இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவை முன்னிட்டு முக்கிய இடங்களில் இருந்து மண்டைக்காட்டிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்