Makara Lagnam Palangal: ‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் சூரியன் நின்ற பலன்கள்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Makara Lagnam Palangal: ‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் சூரியன் நின்ற பலன்கள்!

Makara Lagnam Palangal: ‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் சூரியன் நின்ற பலன்கள்!

Kathiravan V HT Tamil
May 15, 2024 05:55 PM IST

Makara Lagnam Palangal: மகர லக்னம் சனி பகவானின் ஆட்சி பெற்ற லக்னமாக உள்ளது. பரபரப்பாக செயல்படும் சர ராசியான மகரம் லக்னத்தினர் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் சூரியன் நின்ற பலன்கள்!
‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் சூரியன் நின்ற பலன்கள்!

மகர ராசிக்கு 8ஆம் இடத்தின் அதிபதியாக உள்ள சூரியன் இருக்கும் இடத்தின் அடிப்படையில் வழங்கும் பலன்களை தற்போது பார்க்கலாம்:-

மகரம் லக்னத்தில் சூரியன் 

லக்னம் எனப்படும் முதல் வீட்டில் சூரிய பகவான் இருப்பது அவ்வளவு சிறப்பானதாக இருக்காது. ஆனால் பளிச் என்று தெரியும் அளவுக்கு உங்கள் வாழ்கை இருக்கும். உங்களை பற்றி பலரும் தெரிந்து வைத்து இருப்பார்கள். புகழ் அடையக்கூடியவர்களாக இருப்பீர்கள். 

இரண்டாம் இடத்தில் சூரியன் 

உங்களின் இரண்டாம் இடமான கும்பராசியும் சனியின் ஆதிக்கம் பெற்ற இடமாக உள்ளது. இந்த இடத்தில் சூரியன் உள்ளது எதிர்பாராத அதிர்ஷ்ட்டத்தை தரக்கூடியதாக அமையும். குடும்பம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.

மூன்றாம் இடத்தில் சூரியன்

மூன்றாம் இடத்தில் சூரியன் இருப்பது மிகுந்த தைரியத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். இந்த தைரியம் மூலம் உங்களுக்கு நற்பலன்கள் கொடுக்கும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்ற பழமொழியின் அடிப்படையில் 8ஆம் இட அதிபதியான சூரியன் லக்னத்திற்கு பாவியாக வருவதால் மூன்றாம் இடத்தில் மறைவது சிறப்புகளை தரும். 

நான்காம் இடத்தில் சூரியன்

நான்காம் இடமான மேஷம் ராசியில் சூரியன் உச்சம் பெறுவதால் வீடு, நிலம், வாகனங்களை வாங்கும் யோகம் ஏற்படும். தாயின் நிலை உங்களுக்கு நன்மைகளை தரும் நிலையில் உள்ளது.

ஐந்தாம் இடத்தில் சூரியன் 

புத்திர ஸ்தானம் எனப்படும் ஐந்தாம் இடத்தில் சூரியன் இருப்பது எதிர்பாராத மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. பிள்ளைகள் மூலம் பெருமை அடையக்கூடியவர்களாக இருப்பீர்கள். 

ஆறாம் வீட்டின் சூரியன் 

ஆறாம் இடத்தில் சூரியன் இருந்தால் நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எதிர்களால் பாதிப்புகள் ஏற்படலாம். 

ஏழாம் வீட்டில் சூரியன் 

சந்திரனின் ஆட்சி வீடான ஏழாம் வீட்டில் சூரியன் இருந்தால் காதல் திருமணம் கைக்கூடும். உங்கள் வாழ்கை துணை மிக சிறப்பானவராக இருப்பார். 

எட்டாம் வீட்டில் சூரியன்

எட்டாம் இடமான சிம்ம ராசியில் சூரியன் இருந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும், அதே சமயம் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளது. 

ஒன்பதாம் வீட்டில் சூரியன்

கன்னி ராசியில் சூரியன் இருந்தால், யோகம் தரும் இடமாக உள்ளது. தந்தையால் உங்களுக்கு சிறப்புகள் ஏற்படும். 

பத்தாம் வீட்டில் சூரியன் 

பத்தாம் இடமான துலாம் ராசியில் சூரியன் நீசம் பெறுவதால், தந்தையின் தொழிலை செய்யக்கூடிய நிலை ஏற்படும். எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். 

பதினோராம் வீட்டில் சூரியன் 

விருச்சிகம் ராசியில் சூரியன் இருப்பது தந்தை மூலம் மகிழ்ச்சிகள் கிட்டும். சிறப்பான நற்பலன்கள் கிடைக்கும்.

பன்னிரெண்டாம் வீட்டில் சூரியன் 

12ஆம் இடமான தனுசு ராசியில் சூரியன் இருப்பது அவ்வளவு யோக பலன்களை தராது. தந்தையின் மூலம் செல்வங்களை இழக்க நேரிடலாம். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner