தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Makara Lagnam Palangal: ‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் சுக்கிரன் நின்ற பலன்கள்!

Makara Lagnam Palangal: ‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் சுக்கிரன் நின்ற பலன்கள்!

Kathiravan V HT Tamil
May 17, 2024 06:15 AM IST

“Makara Lagnam Palangal: மகரம் லக்னத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் அழகான தோற்றம் கொண்டவர்களாகவும், கலைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். ஆனால் எதிர்காலம் பற்றிய திட்டம் இவர்களுக்கு பெரியதாக இருக்காது. இவர்களின் இல்லறம் மகிழ்சிகரமாக அமையும்”

‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் சுக்கிரன் நின்ற பலன்கள்!
‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் சுக்கிரன் நின்ற பலன்கள்!

மகரம் லக்னம் என்பது சனி பகவானின் ஆட்சி வீடாக உள்ளது. ஆயுள்காரகனான சனி பகவானின் மகரம் லக்னத்தில் பிறந்தவர்கள் எப்போதும் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்படுவார்கள். எடுத்த காரியத்தை எப்படியும் முடிக்க வேண்டும் என்ற உத்வேகம் இருக்கும்.  தங்கள் மனதில் எதையும் வைத்துக் கொள்ளாலம் வெளிப்படையாக பேசுவார்கள். கலை ஆர்வம் கொண்டவர்களாக இவர்கள் விளங்குவார்கள். 

இவர்களுக்கு சுக்கிர பகவான் 5ஆம் இடத்தின் அதிபதியாகவும், 10ஆம் இடத்தின் அதிபதியாகவும் உள்ளார். 

லக்னத்தில் சுக்கிரன்

உங்கள் லக்னத்தில் சுக்கிரன் இருப்பவர்கள் அழகான தோற்றம் கொண்டவர்களாகவும், கலைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். ஆனால் எதிர்காலம் பற்றிய திட்டம் இவர்களுக்கு பெரியதாக இருக்காது. இவர்களின் இல்லறம் மகிழ்சிகரமாக அமையும்.  

2ஆம் இடத்தில் சுக்கிரன் 

இரண்டாம் இடமான கும்பம் ராசியில் சுக்கிரன் இருந்தால் கலைத்துறை மூலம் வருவாய் ஈட்டும் சூழல் உண்டாகும். உங்கள் பேச்சில் நகைச்சுவை வெளிப்படும். காதல் கைகூடி மகிழ்ச்சியான திருமண வாழ்கை அமையும். களத்திர காரகன் சுக்கிரன் இரண்டாம் இடத்தில் இருப்பது இருக்கும் துறை சார்ந்த வாழ்கை துணை அமைய அதிக வாய்ப்புகள் உண்டு.

3ஆம் இடத்தில் சுக்கிரன்

மூன்றாம் இடமான மீனத்தில் சுக்கிரன் உச்சம் அடைவது  சில நன்மைகளை தந்தாலும். புத்திரக்காரகன் மற்றும் களத்திரக்காரகன், கர்ம ஸ்தானத்தின் அதிபதியான சுக்கிரன் மறைவு ஸ்தானமான மூன்றாம் இடத்தில் மறைவது பெரிய பலன்களை தராது. உங்கள் குழந்தைகள் உடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழிலில் மறைமுக எதிரிகள் உண்டாக வாய்ப்பு உண்டு. பெண்களுக்கு கட்டுப்பட்டு செயல்படும் நிலை உண்டாகும். 

4ஆம் இடத்தில் சுக்கிரன்

நான்காம் இடமான மேஷம் ராசியில் சுக்கிரன் இருப்பது யோகமான பலன்களை தரும். சுய சம்பாத்யம் மூலம் வீடு, நிலம், வாகன வசதிகளை பெருக்கி கொள்ளும் சூழல் ஏற்படும். உங்கள் வாழ்கை துணைக்கு கட்டுப்பட்ட நபராக இருக்க வேண்டியது இருக்கும். 

5ஆம் இடத்தில் சுக்கிரன்

ஐந்தாம் இடமான ரிஷப ராசியில் சுக்கிரன் ஆட்சி வீடாக உள்ளதாலும், மகரம் லக்னத்திற்கு திரிகோணமாகவும் அமைவதால் காதல் வாழ்கையில் ஈடுபாடு ஏற்படுத்தும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். 

6ஆம் இடத்தில் சுக்கிரன்

ஆறாம் இடமான மிதுனம் ராசியில் சுக்கிரன் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. நோய் ஸ்தானத்தில் சுக்கிரன் இருப்பது களத்திரம் தொடர்பான விஷயங்களில் பகையை உண்டாக்கலாம். வாழ்கை துணை உடன் முரண்பாடுகள் உண்டாகலாம். 

7ஆம் இடத்தில் சுக்கிரன்

ஏழாம் இடமான கடகம் ராசியில் சுக்கிரன் இருந்தால் அழகான வாழ்கை துணை அமையும். இல்வாழ்கை மகிழ்ச்சிகரமாக அமையும். 

8ஆம் இடத்தில் சுக்கிரன்

மறைவு ஸ்தானம் எனப்படும் எட்டாம் இடமான சிம்மம் ராசியில் சுக்கிரன் இருப்பது மகிழ்ச்சி அற்ற வாழ்கையில் தரலாம். இல்லற வாழ்கை எதிர்பாராததாக இருக்கும். வாழ்கை துணை உடன் கருத்து வேறுபாடுகள் அமையலாம்.

9ஆம் இடத்தில் சுக்கிரன் 

ஒன்பதாம் இடமான கன்னியில் சுக்கிரன் நீசம் பெறும் என்றாலும் இரண்டாவது திரிகோண வீடு என்பதால் இல்லறம் பிரச்னை இன்றி இருக்கும். ஆனால் உங்கள் வாழ்கை துணை அதிகம் வாக்குவாதம் செய்வார். 

10ஆம் இடத்தில் சுக்கிரன்

பத்தாம் இடமான துலாம் ராசியில் சுக்கிரன் இருப்பது, தொழில், குழந்தைகள், காதல், இல்லறம் தொடர்பான விவகாரங்களில் மிகுந்த நன்மைகளை தரும்.

11ஆம் இடத்தில் சுக்கிரன்

பதினோராம் இடமான விருச்சிகம் ராசியில் சுக்கிரன் இருப்பது விரும்பிய காதல் வாழ்கையை ஏற்படுத்தும். நிறைவான வாழ்கையை வாழும் நிலை உண்டாகும். 

12ஆம் இடத்தில் சுக்கிரன்

பன்னிரெண்டாம் இடமான தனுசு ராசியில் சுக்கிரன் இருப்பது, தொழில் சம்பதமான விஷயங்களில் அதிக முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும், குழந்தைகளுக்காக அதிக விரயங்களை செய்வீர்கள். இல்லறம் மகிழ்ச்சி தராது. 

 பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel