தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Makara Lagnam Palangal: ‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் செவ்வாய் நின்ற பலன்கள்!

Makara Lagnam Palangal: ‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் செவ்வாய் நின்ற பலன்கள்!

Kathiravan V HT Tamil
May 18, 2024 06:15 AM IST

“Makara Lagnam Palangal: மகர லக்னத்தில் செவ்வாய் இருப்பது வீடு, நிலம், வாகன யோகங்கள் கிடைக்கும். நினைத்த கல்வியை பெறும் நிலையை ஏற்படுத்தும்”

‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் செவ்வாய் நின்ற பலன்கள்!
‘மகர லக்னமா நீங்கள்!’ உங்கள் ஜாதகத்தில் 12 வீடுகளில் செவ்வாய் நின்ற பலன்கள்!

சனியின் ஆட்சி வீடான மகரம் லக்னத்திற்கு யோகாதிபதியாக சுக்கிரன், புதன், ராகு, கேது உள்ளிட்ட கிரகங்களாக உள்ளன. செவ்வாய், சூரியன், சந்திரன், குரு ஆகியோர் பகை கிரகங்களாக உள்ளன. ஆனாலும் கூட மகரம் லக்னத்தில்தான் செவ்வாய் உச்சம் பெறுகிறார். செவ்வாய் உச்சம் பெறுவது வீடு,நிலம், வாகன யோகங்களை தரும் நன்மை அளிக்கும் நிலை ஏற்படும். 

லக்னத்தில் செவ்வாய்

லக்னத்தில் செவ்வாய் இருப்பது வீடு, நிலம், வாகன யோகங்கள் கிடைக்கும். நினைத்த கல்வியை பெறும் நிலை ஏற்படும். 

2ஆம் இடத்தில் செவ்வாய்

2ஆம் இடமான கும்பம் ராசியில் செவ்வாய் இருந்தால், உங்கள் பேச்சை அதிகாரம் கொண்டதாக மாற்றிவிடும். உங்கள் சம்பாத்யம் மூலம் வீடு, நிலம்,வாகன யோகம் அமையும். மற்றவர்களுக்கு மிகுந்த உதவிகளை செய்வீர்கள்.

3ஆம் இடத்தில் செவ்வாய்  

3ஆம் இடமான மீனம் ராசி மறைவு ஸ்தானமாக வருகிறது. இங்கு செவ்வாய் பகவான் இருந்தால் இளைய சகோதரர்களுடன் இணக்கம் ஏற்படாது. ஆனால் இளைய சகோதரன் இருப்பது உங்களுக்கு மிகுந்த தைரியத்தை தரும் விதமாக இருக்கும். 3ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பது அவ்வளவு யோகம் இல்லை. 

4ஆம் இடத்தில் செவ்வாய்

4ஆம் இடமான மேஷம் ராசியில் செவ்வாய் இருப்பதால் மிகுந்த யோகம் தரும். வீடு, நிலம், வாகன யோகம் நீங்கள் விரும்பியபடி அமையும். தாயின் சொல்லுக்கு கட்டுப்படும் நிலை ஏற்படும். 

5ஆம் இடத்தில் செவ்வாய்

5ஆம் இடமான ரிஷபம் ராசியில் செவ்வாய் இருந்தால் தைரியமான குழந்தைகள் பிறப்பார்கள். பிள்ளைகள் மூலம் வீடு, நிலம், வாகன யோகம் பெருவீர்கள். 

6ஆம் இடத்தில் செவ்வாய் 

6ஆம் இடமான மிதுனம் ராசியில் செவ்வாய் இருந்தால் பகைவர்கள் உங்களை விட அதிக வலிமை பெற்று இருப்பார்கள். வாயு, தசைப்பிடிப்பு சார்ந்த கோளாறுகள் ஏற்படும். தாயார் உடன் இணக்கமான நிலையில் இருக்க முடியாது. 

7ஆம் இடத்தில் செவ்வாய்

7ஆம் இடமான கடகம் ராசியில் செவ்வாய் நீசம் பெறுகிறது. இருந்தாலும் கேந்திரமாக வருவதால் ஓரளவு நன்மை கிடைக்கும். தாயால் கிடக்கும் சுகம் குறைவாக இருக்கும். வாகனம் மூலம் கிடைக்கும் சுகங்கள் குறையும். 

8ஆம் இடத்தில் செவ்வாய்

8ஆம் இடமான சிம்மம் ராசியில் செவ்வாய் இருந்தால் விபத்தின் மூலம் பெரும் தனம் வரலாம். அல்லது விபத்தின் மூலம் பிரச்னைகள் ஏற்படலாம். 

9ஆம் இடத்தில் செவ்வாய்

9ஆம் இடமான கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் வீடு, நிலம், வாகன யோகம் அமையும், மூதாதையர்கள் சொத்துக்கள் கிடைக்கும். தந்தை கண்டிப்பானவராக இருப்பார். 

10ஆம் இடத்தில் செவ்வாய்

10ஆம் இடமான துலாம் ராசியில் செவ்வாய் இருந்தால், தொழில் ரீதியான சிறப்பை பெருவீர்கள். உங்கள் சொந்த இடத்திலேயே தொழில் ஸ்தானத்தை அமைத்துக் கொள்வீர்கள். தாயார் மூலதனம் மூலம் தொழில் செய்வீர்கள். சுய தொழில் செய்வதில் ஆர்வம் இருக்கும். 

11ஆம் இடத்தில் செவ்வாய்

11ஆம் இடமான விருச்சிகம் ராசியில் செவ்வாய் இருந்தால் நீங்கள் அடையும் சந்தோஷங்கள் மன நிறைவாக இருக்கும். யோகம் கிடைக்கும். 

12ஆம் இடத்தில் செவ்வாய் 

12ஆம் இடமான மீனம் ராசியில் செவ்வாய் இருந்தால், வீடு, நிலம், வாகன வாய்ப்புகள் கரையும்.

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள்/ ஜோதிடர்கள்/ பஞ்சாங்கங்கள்/ சொற்பொழிவுகள்/ நம்பிக்கைகள்/ வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

WhatsApp channel