Mahalaya Amavasai: வீட்டிலேயே தர்ப்பணம் செய்வது எப்படி? மூதாதையர்கள் ஆசி பெற்று வாழ்வில் முன்னேற்றம் காணலாம்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mahalaya Amavasai: வீட்டிலேயே தர்ப்பணம் செய்வது எப்படி? மூதாதையர்கள் ஆசி பெற்று வாழ்வில் முன்னேற்றம் காணலாம்

Mahalaya Amavasai: வீட்டிலேயே தர்ப்பணம் செய்வது எப்படி? மூதாதையர்கள் ஆசி பெற்று வாழ்வில் முன்னேற்றம் காணலாம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Oct 03, 2023 08:21 PM IST

மகாளய அமாவாசை நாளில் முக்கியத்துவம் என்ன, அந்த நாளில் கடைப்பிடிக்க வேண்டிய சடங்குகளும், முன்னோர்களுக்கு சிரார்த்தம் செய்வதால் என்ன பலன்கள் என்பதை பார்க்கலாம்.

மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு வீட்டிலேயே தர்ப்பணம் செய்யும் முறை
மகாளய அமாவாசை நாளில் முன்னோர்களுக்கு வீட்டிலேயே தர்ப்பணம் செய்யும் முறை

இது போன்ற போட்டோக்கள்

மாதந்தோறும் அமாவாசை அன்று வீட்டில் இறந்து போன மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் இதை செய்ய முடியாதவர்கள், மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்தால் ஆண்டு முழுவதும் பலன்களை பெறலாம் என கூறப்படுகிறது.

உத்ராயன காலமான தை மாதத்தில் வரும் அமாவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வரும் அமாவாசை புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வரும் அமவாசை ஆகிய மூன்று அமாவாசை நாள்களும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது.

எனவே எதிர்வர இருக்கும் மகாளய அமாவாசை நாளில் வீட்டில் இறந்து போன மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகவும் நன்மையை தரும். வீட்டிலேயே தர்ப்பணம் செய்வது எப்படி என்பதை பார்ப்பதற்கு முன்னர் மகாளய அமாவாசை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

புரட்டாசி மாதத்தில் நமது பித்ரு தெய்வங்கள் பல சிரமங்களை எதிர்கொள்கின்றன. துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு சூரியன் செல்லாமல் இருப்பதே இதற்கு காரணம் என்கிறது புராணங்கள். எனவே இந்த நேரத்தில் முன்னோர்கள் பூமியில் உள்ள தங்கள் வீடுகளை சுற்றி வரம் தேடி அலைவார்கள்.

அதனால்தான் இந்த மகாளய சடங்குகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. நூறு யாகம் செய்வதை விட, நம் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வது முக்கியம் என்று கூறப்படுகிறது.

உத்தராயணம் என்பது தெய்வங்களின் காலம் என்றும், தட்சிணாயனம் என்பது பித்ருகாலம் எனவும் நம் முன்னோர்கள் நம்பினர். மகாளய என்றால் அமாவாசையில் முடிவடையும் பதினைந்து நாள்கள் என்று பொருாகு. இதில் முக்கியமான திதி திரயோதசி. அதாவது பத்ரபாத கிருஷ்ண த்ரயோதசி மகம் நட்சத்திரத்துடன் இணைந்தால் பித்ருக்களுக்கு நித்திய திருப்தியை தருகிறது. இதன்பின்னர் நம்மை ஆசீர்வதிக்கிறார்கள் என்பதாக ஐதீகம்.

எனவே இந்த புண்ணிய தினத்தில் மூதாதையர்களை மனமுருக நினைத்து வழிபட்டால், பித்ரு முதலான தோஷங்கள் விலகி முன்னோர்களின் ஆசியுடன் நன்மையை பெறுவதுடன், வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள்.

வீட்டில் இருந்தபடியே முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது எப்படி?

மகாளய அமாவாசை நாளில் காலையில் எழுந்ததும் அரிசி சாதம் சமைத்து, அதில் எள்ளு கலந்து வாழை இலையில் பிண்டம் பிடிச்சு வைக்கணும். வீட்டில் இருக்கும் ஆண்கள் இதை செய்வதால் நல்ல பலனை பெறலாம்.

தர்ப்ப புல் எடுத்து மோதிரமாக செய்து அதை விரலில் மாட்டி, தாம்பூலம்த்தில் எள்ளு, தண்ணீர் எடுத்து பக்கத்துல வைக்க வேண்டும். பின் ஆட்காட்டி விரல், பெருவிரல் இரண்டுக்கும் நடுவுல எள்ளு வச்சுட்டு தர்ப்பணம் பண்ணலாம்.

எள்ளு கலந்து சாதம் பிண்டம் பிடித்து காக்கைக்கு வைப்பதன் மூலம் நேரடியாக நம்ம பித்ருக்களுக்கு போய் சேரும் என்கிற ஐதீகம் உண்டு.

வீட்டில் இறந்த மூதாதையரின் தேதி நினைவில் இல்லை என்றால், மகாளய அமாவாசை அந்த நாளாக தீர்மானித்து தர்ப்பணம் செய்யலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்