Mahalakshmi yogam: பணம் கொட்டும் மகாலட்சுமி யோகம் யாருக்கு?’
”Mahalakshmi yogam: ஒருவருக்கு மகாலட்சுமி யோகம் இருந்தால் அவர்கள் வாழ்வில் யாரிடமும் கையேந்த மாட்டார்கள்”
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லுக்கு சேர்க்கை என்று பொருள். ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன.
ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம் ஆகிய யோகங்களுக்கு மத்தியில் மகாலட்சுமி யோகம் சற்று வேறுபட்டது.
ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி அதிக பலம் பெற்று ஆட்சி, உச்சம் போன்ற நிலை பெற்று ஒன்பதாம் அதிபதி ஆட்சியோ உச்சமோ பெற்று கேந்திர திரிகோணங்களில் நின்றால் மகாலட்சுமி யோகம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு ஒன்பதாம் இட அதிபதி மற்றும் சுக்கிரன் கேந்திர, திரிகோணங்களில் இருந்தாலும், ஆட்சி உச்சம் பெற்றாலும் இந்த மகாலட்சுமி யோகம் ஏற்படும் என்கிறார் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
ஒருவருக்கு மகாலட்சுமி யோகம் இருந்தால் அவர்கள் வாழ்வில் யாரிடமும் கையேந்த முடியாத நிலையை கடவுள் ஏற்படுத்துவார்.
மகாலட்சுமி யோகம் உள்ள பெண்களுக்கு நல்ல கணவர் கிடைப்பார் மகாராணி போன்ற திருமண வாழ்வு அமையும் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.
செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும் இந்த யோகம் கலையின் அம்சமாக குறிப்பிடப்படும் சுக்கிரனை அடிப்படையாகக் கொண்டது. இந்த யோகத்தை ஜனன ஜாதகத்தில் பெற்ற ஒருவன் நற்குணங்கள் உடையவராகவும்,அழகானவராகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார்கள்.
இந்த யோகம் உள்ளவர்களுக்கு செல்வ நிலை அவர்களின் செயல்பாடுகள் மற்றும் முயற்சிகளுக்கு ஏற்ப உயர்ந்து கொண்டே செல்லும். இந்த யோகதாரிகள் அனைத்து செல்வங்களையும் பெற்று அரசனுக்கு நிகராக விளங்குவார்கள்.
டாபிக்ஸ்