Maha Shivaratri 2024: சிவராத்திரியில் சிவனின் அருளை முழுமையாக பெறுவது எப்படி?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Maha Shivaratri 2024: சிவராத்திரியில் சிவனின் அருளை முழுமையாக பெறுவது எப்படி?

Maha Shivaratri 2024: சிவராத்திரியில் சிவனின் அருளை முழுமையாக பெறுவது எப்படி?

Kathiravan V HT Tamil
Mar 08, 2024 06:30 AM IST

”சிவராத்திரியில் சிவனின் அருளைப் பெறுவதற்கான சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இது தீமைக்கு எதிரான நன்மை, அறியாமைக்கு எதிரான ஞானம். மரணம் பயத்திற்கு எதிரான வாழ்க்கை ஆகியவற்றை பெரும் நாளக விளங்குகிறது”

மகா சிவராத்திரி
மகா சிவராத்திரி (Pixabay)

ஒவ்வொரு தமிழ் மாதத்திலுமே அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தசி திதியில் மாத சிவராத்திரி வழிபாடு நடைபெறுகிறது. மாத சிவராத்திரியின் மகிமையை சிவபெருமான் நந்திக்குச் சொன்னார். நந்தி மற்றவர்களுக்குச் சொன்னதாக புராணங்கள் சொல்கின்றன.

சிவராத்திரியில் சிவனின் அருளைப் பெறுவதற்கான சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இது தீமைக்கு எதிரான நன்மை, அறியாமைக்கு எதிரான ஞானம். மரணம் பயத்திற்கு எதிரான வாழ்க்கை ஆகியவற்றை பெரும் நாளக விளங்குகிறது. 

ஓவ்வொரு மாத சிவராத்திரியிலும், ஒவ்வொரு தெய்வங்கள் சிவனை வணங்குகின்றனர். அதேபோல் மாசிமாதத்தில் வரும் மகா சிவராத்திரியில் தேவ தூதர்களும், பக்தர்களும் வணங்குவதற்கே உரிய நாளாக சிவராத்திரி உள்ளது. 

சிவராத்திரி அன்று பகலில் கடினமான உணவுகளை சாப்பிடாமல், பழங்கள் சாப்பிட்டு, முழு முழுக்க சிவனைக் குறித்து நினைக்க வேண்டும். அவர் நிகழ்த்திய திருவிளையாடல்களை கேட்பது கூடுதல் புண்ணியம் தரும்.  இன்று இரவில் கண் விழித்திருந்து சிவதரிசனம் செய்வோருக்கு, வாழ்வில் எல்லா நலன்களும் கிடைக்கப்பெறும் என்கிறார் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன். 

மனிதனைப் பாதிக்கும் குணங்களான ஆசை, காமம், சோம்பல் ஆகிய குணங்களை வென்று, நன்மைகளைத் தரும் மேலான குணத்தை தரும் விரதம் இது. இவ்விரதத்தை அனுஷ்டிப்போருக்கு பூரண ஆயுளும்.செல செழிப்பும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. 

Whats_app_banner

டாபிக்ஸ்