தமிழ் செய்திகள்  /  Astrology  /  Maha Shivratri 2024: List Of Puja Samagri, Bhog Items Needed For The Festival

Maha Shivratri 2024: மகா சிவராத்திரி பூஜை நாளில் தேவைப்படக்கூடிய பொருள்களின் முழு விவரம் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 03, 2024 05:56 PM IST

இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி வரும் 8ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், இந்த நாளில் தேவைப்படக்கூடிய பூஜை சாமான்கள் எவை என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்யும் பக்தர்கள்
மகாசிவராத்திரியை முன்னிட்டு சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்யும் பக்தர்கள் (HT Gallery )

ட்ரெண்டிங் செய்திகள்

இந்து நாள்காட்டியின் படி, மாசி மாதத்தில் இந்த நிகழ்வு கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டில், மகாசிவராத்திரி நிகழ்வு மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

இந்துக்களுக்கு மிகவும் புனித மிக்க நாளாக கருதப்படும் இந்த நாளில் பொதுமக்கள் ஆரவாரத்துடனும் உற்சாகத்துடனும் சிவபெருமானுக்கு பூஜை செய்வார்கள்.  மகாசிவராத்திரி சிவன்  -பார்வதியின் திருமணத்தையும், தாண்டவம் என்று அழைக்கப்படும் சிவன் நடனமாடும் தருணத்தையும் கௌரவிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்து மதத்தின் கூற்றுப்படி, இருப்பு மற்றும் பிரபஞ்சத்தில் "இருளையும் அறியாமையையும் வெல்வதை" குறிக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பம் இந்த நாள் கருதப்படுகிறது. 

இந்த நாளில் சிவபெருமானுக்காக பிரார்த்தனை செய்வது, விரதம் மேற்கொள்வது போன்றவற்றை பொதுமக்கள் மேற்கொள்கிறார்கள்.

இந்த நாளில், வில்வ இலை, எருக்கன் பூ, வெள்ளை சந்தனம், வெள்ளை பூக்கள், பசும்பால் ஆகியவை சிவனுக்கு அபிஷேகமாக வழங்கப்படுகின்றன. 

மகாசிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவனையும் பார்வதியையும் வழிபட்டால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம். சிவராத்திரி நாள் பூஜைக்கு மறக்காமல் எடுத்துக்கொள்ள வேண்டிய பூஜை பொருள்கள் எவை என்பதை பார்க்கலாம்

 • சிவலிங்கம் அல்லது சிவபெருமானின் உலோக சிலை வைப்பதற்கான மேடை
 • சிவலிங்கம் அல்லது பஞ்ச தாதுவால் செய்யப்பட்ட சிலை அல்லது சிவபெருமானின் உருவம்/ ஒரு எண்ணெய் விளக்கு
 • விளக்குக்கு எள் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் அல்லது நெய்
 • தீப்பெட்டி, பருத்தி திரிகள்
 • ஆரத்திக்கு கற்பூரம்
 • வாசனை திரவியம் (அத்தர் அல்லது சந்தனம்)
 • பூக்கள், பத்திகள்
 • பழங்கள் (ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட வகையான பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள்). ஒரு பழத்தை கூட வழங்கலாம்.
 • வில்வம். மிக முக்கியமான பிரசாதங்களில் ஒன்றாக உள்ளது
 • உலர் பழங்கள்
 • மஞ்சள் கலந்த பச்சை அரிசி
 • திருநீறு
 • பூஜை செய்வதற்கு பஞ்ச பாத்திரம். வெள்ளி, பித்தளை அல்லது தாமிரம் ஆனது
 • வெள்ளை நிற புதிய துண்டு. இதில் ஒன்று சிவபெருமானுக்கு வஸ்திரமாக சமர்ப்பிப்பதற்கும், அபிஷேகத்துக்கு பிறகு சிலையைத் துடைப்பதற்கு மற்றொன்றை பயன்படுத்த வேண்டும்.
 • பூஜை பகுதியை சுத்தம் செய்வதற்கு தண்ணீர்

 

பஞ்சாமிர்தம்: மகாசிவராத்திரி வழிபாட்டின் போது, பஞ்சாமிர்தத்தை நைவேத்யமாக வழங்கலாம். இது சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த பிரசாதமாக கருதப்படுகிறது.

இனிப்புகள்: மகாசிவராத்திரி வழிபாட்டின் போது, பசும்பாலில் செய்யப்பட்ட எவ்வித இனிப்பையும் படைத்தால் சிவபெருமானின் அருளைப் பெறலாம். இனிப்புகள் இல்லாவிட்டாலும் சர்க்கரை மற்றும் தேனையும் வழங்கலாம்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

WhatsApp channel

டாபிக்ஸ்