’2025ஆம் ஆண்டு ஜனவரியில் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா!’ புராண வரலாறும்! பின்னணியும்!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’2025ஆம் ஆண்டு ஜனவரியில் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா!’ புராண வரலாறும்! பின்னணியும்!

’2025ஆம் ஆண்டு ஜனவரியில் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா!’ புராண வரலாறும்! பின்னணியும்!

Kathiravan V HT Tamil
Nov 05, 2024 06:49 PM IST

Maha Kumbh Mela 2025: பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளா விழாவின் முதல் நாளில் சித்தி யோக காலத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. வரும் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

’2025ஆம் ஆண்டு ஜனவரியில் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா!’ புராண வரலாறும்! பின்னணியும்!
’2025ஆம் ஆண்டு ஜனவரியில் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா!’ புராண வரலாறும்! பின்னணியும்!

மகா கும்பமேளா
பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் மகா கும்பமேளா விழாவின் முதல் நாளில் சித்தி யோக காலத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. இந்த விழாவில் வழிபாட்டுக்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மகா கும்பமேளா வரும் ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

மகா கும்பமேளா நிகழ்வுகள்

13 ஜனவரி 2025- பௌஷ் பூர்ணிமா

14 ஜனவரி 2025- மகர சங்கராந்தி

29 ஜனவரி 2025 - மௌனி அமாவாசை

3 பிப்ரவரி 2025- வசந்த பஞ்சமி

4 பிப்ரவரி 2025- அச்சல நவமி

12 பிப்ரவரி 2025- மாகி பூர்ணிமா

26 பிப்ரவரி 2025 - மகா சிவராத்திரி

மஹா கும்பமேளாவின் புராண வரலாறு

மகா கும்பமேளா தோற்றிய புராண வரலாறு

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே பார்கடலை கடையும் சம்பவத்துடன் தொடர்புடையது. புராண  கதைகளின் படி, பாற்கடலை கடையும் போது, கிடைத்த அமிர்தம் பானையை கைப்பற்றுவதற்காக தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான போர் நடந்தது. 

அமிர்தத்தைப் பெறுவதற்கான சண்டையின் இடையே பூமியின் நான்கு இடங்களான பிரயாக்ராஜ், உஜ்ஜைன், ஹரித்வார் மற்றும் நாசிக்  ஆகிய பகுதிகளில் அமிர்தம் இருந்த கலசத்தில் இருந்து சில துளிகள் விழுந்தன. எனவே இந்த இடங்கள் புனிதமாக கருதப்பட்டு கும்பமேளா இந்த இடங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது.

குரு பகவானின் இயக்கம்

தேவ குரு எனப்படும் குரு பகவான் ஆனவர் ரிஷபம் ராசியிலும், சூரியன் மகரம் ராசியிலும் இருக்கும் காலகட்டத்தில் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளா நடைபெறும். 

குரு பகவான் மற்றும் சூரிய பகவான் சிம்மம் ராசியில் இருக்கும் போது நாசிக் நகரில் கும்பமேளா நடைபெறுகின்றது. 

குரு பகவான் சிம்ம ராசியிலும், சூரிய பகவான் மேஷம் ராசியிலும் இருக்கும்போது உஜ்ஜயினி நகரில் கும்பமேளா நடத்தப்படுகிறது. 

சூரியன் மேஷ ராசியிலும், குரு பகவான் கும்ப ராசியிலும் இருக்கும்போது ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெறுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்