Magaram Rasi Palangal: இன்று புதன் பெயர்ச்சி! மாஸ் காட்ட போகும் மகரம்! அடிக்கிறது விபரீத ராஜயோகம்! பணம் கொட்டும் நேரம்!
பல நிலைகளில் முயற்சி செய்து, கிடைக்காதவைகள் எல்லாம் தானாக கிடைக்கும் அற்புதங்களை புதன் பகவானின் விபரீத ராஜ யோகம் மூலம் ஏற்படுத்தி தரும். இந்த பலன்களை அடைய மகரம் ராசிக்காரர்கள் தங்களின் புத்தி சாதூரியத்தை பயன்படுத்தி, பதறாமல் சிந்தித்து செயல்படும்போது மிகப் பெரிய வெற்றியை தர முடியும்

ஜூலை 19ஆம் தேதியான இன்று முதல் ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை புதன் பகவானின் சூரியனின் சிம்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
இது போன்ற போட்டோக்கள்
Apr 24, 2025 08:41 AMதிடீர் லாபம் கொட்டோ கொட்டுனு கொட்டும்.. இந்த கிரக சேர்க்கை உங்களுக்கு அதிர்ஷ்டமா.. வெற்றி உங்கள் பக்கமா பாருங்க!
Apr 24, 2025 07:44 AMதொட்டதெல்லாம் வெற்றி.. எந்த 3 ராசியினருக்கு ஜாக்பாட்.. மே மாதம் 6 கிரகங்கள் மாற்றத்தால் பண மழை யாருக்கு பாருங்க!
Apr 24, 2025 07:00 AMதுவாதஷ் யோகம்: உருவானது அபூர்வ யோகம்.. சனி செவ்வாய் கொட்டும் பணமழை.. அதிர்ஷ்ட ராசிகள் யார்?
Apr 24, 2025 05:00 AM‘வெற்றி தேடி வரும்.. சிறப்பான நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்’இன்று ஏப்.24 உங்க நாள் எப்படி இருக்கும்!
Apr 23, 2025 11:17 AMகுரு குறி வச்சுட்டார்.. அசைக்க முடியாத பண மழை ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
Apr 23, 2025 07:30 AMராகு பெயர்ச்சி பலன்கள்: பண காற்று வீசப் போகும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தை கொட்ட வரும் ராகு.. உங்க ராசி இதுல இருக்கா?
இந்த புதன் பெயர்ச்சி மூலம் மகரம் ராசிக்கு மிகப்பெரிய புத்தி மாற்றத்தை தரும், சற்று நிதானித்து செயல்பட்டால் மகரம் ராசிக்காரர்கள் வெற்றிகளை குவிக்கலாம்.
விரைவில் ராசிகளை கடக்கும் புதன் பகவான்
புதன் பகவான் ஒவ்வொரு ராசியையும் 16 நாட்கள் முதல் 21 நாட்களுக்குள் கடந்து விடுவார், சந்திரனுக்கு அடுத்த படியாக மிக விரைவாக ஒரு ராசிக்கட்டத்தை கடக்க கூடிய கிரகம் ஆக புதன் பகவான் உள்ளார்.
ஜூலை 19ஆம் தேதியான இன்று சிம்மம் ராசிக்கு புதன் பெயர்ச்சி ஆகிறார். பின்னர் கன்னி ராசிக்கு சென்று ஆட்சி, உச்சம் பெறக் கூடிய அமைப்பு உள்ளது.
அற்புத பலன்களை தரும் புதன் பகவான்
புதன் பகவானை பொறுத்தவரை மகரம் ராசிக்கு அற்புதமான பலன்களை அள்ளித் தரும் கிரகமாக உள்ளார். புத்திக் கூர்மையை தரும் புதன் பகவான் சூரியனின் 8ஆம் வீடான சிம்மத்திற்கு செல்கிறார். 8ஆம் இடத்தில் 6ஆம் இடத்தின் அதிபதி செல்வது விபரீத ராஜ யோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
உண்டாகும் விபரீத ராஜ யோகம்
இதுவரை பல நிலைகளில் முயற்சி செய்து, கிடைக்காதவைகள் எல்லாம் தானாக கிடைக்கும் அற்புதங்களை புதன் பகவானின் விபரீத ராஜ யோகம் மூலம் ஏற்படுத்தி தரும். இந்த பலன்களை அடைய மகரம் ராசிக்காரர்கள் தங்களின் புத்தி சாதூரியத்தை பயன்படுத்தி, பதறாமல் சிந்தித்து செயல்படும்போது மிகப் பெரிய வெற்றியை தர முடியும்.
பொறுமையுடன் செயல்பட்டால் நன்மைகள் உண்டு
ஜூலை 19ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வரை இந்த இடத்தில் இருப்பார். அதன் பிறகு வக்ரம் பெறக் கூடிய அமைப்பு இருக்கும். வக்ரம் பெறும்போது, புதனின் பார்வை தடுமாற்றங்களை ஏற்படுத்தும். ஒரு செயலை அவசரம் மற்றும் தடுமாற்றத்தில் செயல்படும் போது சிக்கல்கள் ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் சற்று பொறுமையுடன் செயல்பட்டால் நன்மைகள் கிடைக்கும்.
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பணம் குவியும்
இந்த நேரத்தில், 8ஆம் இடத்தில் சூரியன், புதனை குறுக்கும், நெடுக்குமாக கடக்கும் வேளையில் புத ஆதித்திய யோகம் உண்டாகும். புதன் பகவான் தரக்கூடிய திடீர் யோசனை வெற்றிகளை தரும். லாட்டரி போன்ற திடீர் அதிஷ்டங்களுக்கும் இந்த கிரக பெயர்ச்சிகள் ஏற்படுத்தி தரும். பெரிய லாபம் தரக்கூடிய விஷயங்களில் போட்ட பணம் மிகப்பெரிய அளவில் பலன்களை தரக்கூடியதாக மாறும்.
வாகனம், சொத்துக்களை வாங்கும் நிலை, அரசு சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு, அரசு சார்ந்த அனுகூலங்கள் உள்ளிட்டவை உண்டாகும். கடனில் இருந்து வெளி வருதற்கான யோசனை, கடனை பெற்று மிகப்பெரிய தொழிலை உருவாக்கும் நிலை, எதிரிகளின் வம்பு, வழக்குகளில் இருந்து விடுபடுவதற்கான நிலை உள்ளிட்டவைகள் இந்த நேரத்தில் உண்டாகும்.
இந்த நேரத்தில் நம்பிக்கை உடன் நேர்மையாக செயல்படும் போது வெற்றிகள் குவியும். இந்த நேரத்தில் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் தங்கும் வாய்ப்புகள் ஏற்பட்டால், வாழ்கையில் மகிழ்ச்சியை உண்டாகுவதாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள் / கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
