Chitirai Festival 2024: 12 நாள்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு! முழு விவரம்-madurai chitirai festival 2024 date announced - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Chitirai Festival 2024: 12 நாள்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு! முழு விவரம்

Chitirai Festival 2024: 12 நாள்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு! முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 13, 2024 09:10 PM IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவுக்கான முழு விவரமும் வெயிடப்பட்டுள்ளது. அதன்படி சித்திரை திருவிழா 2024 தொடக்கம் முதல் நிறைவு வரை நடைபெற இருக்கும் நிகழ்வுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேதிகள் அறிவிப்பு
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேதிகள் அறிவிப்பு

சித்திரை மாதம் அமாவாசை முடிந்த பிறகு கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் சித்திரை பெருவிழாவானது தொடங்கும். தென் தமிழகத்தில் நடைபெறும் மிகவும் தொன்மையான விழாவாக இது உள்ளது. அதன்படி இந்த ஆண்டில் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழாவானது ஏப்ரல் 23ஆம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் நிறைவு பெறுகிறது.

சித்திரை திருவிழா கொடியேற்றம் காலை 9.55 முதல் 10.19 மணிக்குள் மிதுன லக்கனத்தில் நடைபெற இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

விழா நடைபெறும் 12 நாள்களிலும் மீனாட்சி அம்மன், பல்வேறு விதமான வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். விழாவில் முக்கிய நிகழ்வாக 8வது நாளில், ஏப்ரல் 19ஆம் தேதியில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நடைபெறும். 9வது நாளில் அம்மனின் திக்கு விஜயம் நடைபெறும்.

பத்தாவது நாளில், திருவிழாவின் பிரதான நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடைபெறும். விழா நிகழும் இரண்டு வாரங்களும் மதுரை நகரமே விழா கோலம் பூண்டிருக்கும். அத்துடன் மதுரை சித்திரை திருவிழா காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள்.  சித்திரை திருவிழா காண இந்த ஆண்டிலும் வழக்கம்போல் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சித்திரை திருவிழாவின் மொத்த நிகழ்வுகள்

  • ஏப்ரல் 12 - சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
  • ஏப்ரல் 13 - காலை 7 முதல் 9.30 வரை தங்க சப்பர நிகழ்வு. மாலை 7 முதல் 10.30 வரை பூதம், அன்னம் வாகனம்
  • ஏப்ரல் 14 - காலை 7 முதல் 9.30 வரை தங்க சப்பர நிகழ்வு. மாலை 7 முதல் 10.30 வரை கைலாச பர்வதம், காமதேனு வாகனம்
  • ஏப்ரல் 15 - காலை, மாலை தங்க பல்லாக்கு
  • ஏப்ரல் 16 - காலை தங்க சப்பரம், மாலை தங்க குதிரை நிகழ்வு
  • ஏப்ரல் 17 - தங்க சப்பரம், தங்கம் மற்றும் வெள்ளி ரிஷப வாகனம்
  • ஏப்ரல் 18 - தங்க சப்பரம், நந்திகேஸ்வரர் யாளி நிகழ்வு
  • ஏப்ரல் 19 - காலை தங்க பல்லாக்கு, மாலை வெள்ளி சிம்மாசனம்
  • ஏப்ரல் 20 - மரவர்ண சப்பரம், இந்திர விமானம்
  • ஏப்ரல் 21 - வெள்ளி சிம்மாசனம், தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனம், புஷ்ப பல்லாக்கு
  • ஏப்ரல் 22 - திருத்தேர் வடம்பிடித்தல், சப்தாவர்ண சப்பரம்
  • ஏப்ரல் 22 - கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வு 
  • ஏப்ரல் 23 - சித்திரை திருவிழா நிறைவு
  • ஏப்ரல் 23 - கள்ளழகர் ஆற்றில் இறங்குதல்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்