அதிர்ஷ்ட எழுத்துக்கள்: இந்த 4 ஆங்கில எழுத்துக்களில் பெயர் தொடங்கும் பெண்கள் அதிர்ஷ்ட தேவதைகளாம்..!
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அதிர்ஷ்ட எழுத்துக்கள்: இந்த 4 ஆங்கில எழுத்துக்களில் பெயர் தொடங்கும் பெண்கள் அதிர்ஷ்ட தேவதைகளாம்..!

அதிர்ஷ்ட எழுத்துக்கள்: இந்த 4 ஆங்கில எழுத்துக்களில் பெயர் தொடங்கும் பெண்கள் அதிர்ஷ்ட தேவதைகளாம்..!

Karthikeyan S HT Tamil
Published Apr 14, 2025 12:15 PM IST

குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துக்களில் பெயர் தொடங்கும் பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். இவர்களின் ஆதரவு, ஊக்கம் கணவனின் வாழ்வில் அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அது என்னென்ன எழுத்துக்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிர்ஷ்ட எழுத்துக்கள்: இந்த 4 ஆங்கில எழுத்துக்களில் பெயர் தொடங்கும் பெண்கள் அதிர்ஷ்ட தேவதைகளாம்..!
அதிர்ஷ்ட எழுத்துக்கள்: இந்த 4 ஆங்கில எழுத்துக்களில் பெயர் தொடங்கும் பெண்கள் அதிர்ஷ்ட தேவதைகளாம்..!

இது போன்ற போட்டோக்கள்

மேலும், இதுபோன்ற பெண்கள் எப்போதும் தங்கள் கணவர்களை ஊக்குவிப்பார்கள். இவர்களுக்கு அதிக பொறுமையும் உண்டு. இவர்களின் குணம் மற்றவர்களை கவரும். அதேபோல், அவர்கள் மிகவும் அமைதியாகவும், நிதானமாகவும் இருப்பார்கள். அப்படியான பெண்களின் பெயர்கள் எந்த எழுத்தால் தொடங்குகின்றன என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

D

D எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்கள் மிகவும் அன்புள்ளவராக இருப்பார்கள். மற்றவர்களின் மகிழ்ச்சிக்காக அவர்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். D எழுத்தால் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் உங்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தைத் தருவீர்கள். இந்த எழுத்தால் பெயர் தொடங்கினால், கணவருக்கு பொருளாதார பிரச்சனைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வீர்கள். தொழில் வாழ்க்கையும் நன்றாக இருக்கும்.

H

H என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்கள், எந்தவிதமான பிரச்னைகள் வந்தாலும் பயப்பட மாட்டார்கள். துணிச்சல் குணம் உடையவர்களாக கருதப்படுவார்கள். இவர்களின் கணவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். வீட்டிற்கு வந்தவுடன் கணவரை மகிழ்ச்சியாகப் பார்ப்பார்கள். இதுபோன்ற பெண்கள் யாருடைய வாழ்விலும் அடியெடுத்து வைத்தாலும், அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அவர்கள் பணத்துடன் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வியாபாரத்திலும் வெற்றி கிடைக்கும்.

G

G எழுத்துடைய பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். கணவருக்கும் அதிர்ஷ்டத்தைத் தருவார்கள். இவர்களின் மனம் மிகவும் தூய்மையாக இருக்கும். தொழில் வாழ்க்கையிலும் கணவருக்கு எந்தத் தடையும் இருக்காது. அதிர்ஷ்டம் எப்போதும் துணையாக இருக்கும். வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். கணவருக்கு எப்போதும் வெற்றியைத் தருவார்கள். இவர்களின் கணவர்களுக்கு தோல்வி என்றால் என்னவென்று தெரியாதாம்.

K

K எழுத்தால் பெயர் தொடங்கினால், இந்தப் பெண்கள் தங்கள் கணவரின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்துவார்கள். இவர்களுக்கு அதிக புத்திசாலித்தனமும் உண்டு. பயங்கரமான சூழ்நிலைகள் வந்தாலும், மிகுந்த துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள். எத்தகைய வேலையாக இருந்தாலும் அதை செய்து முடிப்பார்கள். ஒவ்வொரு திட்டத்தையும் வெற்றிகரமாக செயல்படுத்துவார்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றவர். 2011 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கல்வி வானொலி ஞானவாணி பண்பலை, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா, டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் நிறுவனங்களைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அரசியல், அன்றாட நிகழ்வுகள், தமிழ்நாடு, தேசம், சர்வதேசம், ஆன்மிகம் மற்றும் யூடியூப் வீடியோ உள்ளிட்ட அனைத்து பிரிவுகளில் செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்