Tamil News  /  Astrology  /  Lords Saturn And Venus Give Heavenly Life For These Zodiac Signs

Sani Sukra: சனியும் சுக்கிரனும் கொடுக்கும் சுபயோகத்தை பெறும் ராசிகள்

Suriyakumar Jayabalan HT Tamil
Jan 03, 2024 05:40 PM IST

சனி மற்றும் சுக்கிரன் கொடுக்கும் சொர்க்க வாழ்க்கையை பெறப்போகின்ற ராசிகள்

சனிபகவான், சுக்கிர பகவான்
சனிபகவான், சுக்கிர பகவான்

ட்ரெண்டிங் செய்திகள்

அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகிறார். இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுகிறார். தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகிறார்.

சுக்கிர பகவான் ஆடம்பர வாழ்க்கைக்கு காரணியாக விளங்கி வருகிறார் அழகு ஆடம்பரம் செல்வம் செழிப்பு உள்ளிட்டவைகளின் தலைவனாக விளங்கும் சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றி விடுகிறார்.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் சனி மற்றும் சுக்கிரன் இணைந்து கேந்திர யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும், இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

தனுசு ராசி

 

சனி மற்றும் சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றன. எதிர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். வியாபாரத்தில் அபரிமிதமான லாபத்தை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. நண்பர்களுடன் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷப ராசி

 

சனி மற்றும் சுக்கிரன் உங்களுக்கு இந்த புத்தாண்டில் நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றனர். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்கள் மத்தியில் பாராட்டுகள் அதிகரிக்கும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள் கைகூடும். சனி பகவானின் அருள் உங்களுக்கு கிடைக்க உள்ளது.

மீன ராசி

 

சனி மற்றும் சுக்கிரன் உங்களுக்கு யோகத்தின் பலன்களை முழுமையாக கொடுக்க போகின்றனர். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுக்கள் கிடைக்கும். நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிக்கிக் கிடந்த பணங்கள் உங்களை தேடி வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.